நாளை முதல் புகையிரதங்களில் பெண்களுக்கு தனியான பயணபெட்டிகள்

சர்வதேச மகளிர் தினத்துக்கு அமைவாக நாளை முதல் அலுவலக ஏழு புகையிரதங்களில் பெண்களுக்காக புகையிரத பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளில் அடிக்க இடம்பெறும் சிரமங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

இதற்கமைவாக காலை 6.30 மணிக்கு மீறிகம புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 525 புகையிரதத்திலும் ரம்புக்கணையில் நிலையத்திலிருந்து காலை 5.57 மணிக்கு கொழும்பு கோட்டையை நோக்கி பயணிக்கும் புகையிரதத்திலும் பொல்காவலை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு கொழும்பு கோட்டை வரை செல்லும் புகையிரதத்திலும் மஹவ புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் புகையிரதத்திலும் புத்தளம் புகையிரத நிலையத்திலிருந்து காலை 4.50 மணிக்கு மருதானையை நோக்கி செல்லும் புகையிரதத்திலும் வங்கதெனிய புகையிரத நிலையத்திலும் காலி புகையிரத நிலையத்திலும் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மருதானை வரை செல்லும் சமுத்திரா தேவி புகையிரதத்திலும் மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து செல்லும் அலுவலக புகையிரதங்களிலும் மகளிருக்கான புகையிரதபயண பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முதல் கட்டத்தின் கீழ் அலுவலக புகையிரதங்களில் மகளிர்களுக்கான புகையிரத பெட்டிகள் இணைக்கப்படுவதுடன் மகளிர்களுக்கு எதிர்காலத்தில் ஏனைய புகையிரத சேவைகளிலும் இவ்வாறான பயண வசதிகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 
நாளை முதல் புகையிரதங்களில் பெண்களுக்கு தனியான பயணபெட்டிகள் நாளை முதல் புகையிரதங்களில் பெண்களுக்கு தனியான பயணபெட்டிகள் Reviewed by Vanni Express News on 3/07/2019 11:21:00 PM Rating: 5