ரணில் - சஜித்தை பிரிக்க ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் சிலர் முயற்சி

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த ஐ.தே.கவின் சில எம்.பி களும் எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களும் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

தேவையற்ற காரணங்களை தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் பிரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

பொரளையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் மதுரட்ட தம்மாலங்கார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

குரோதங்களை ஒருபுறம் வைத்து ஒற்றுமையாக செயற்படுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் மதுரட்ட தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் - சஜித்தை பிரிக்க ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் சிலர் முயற்சி ரணில் - சஜித்தை பிரிக்க ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் சிலர் முயற்சி Reviewed by Vanni Express News on 3/07/2019 02:29:00 PM Rating: 5