haiiii

IPL 2019 - CSK இன் பந்துவீச்சில் சிக்கித் தவித்த KKR

8 அணிகள் பங்கேற்றுள்ள 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நாணய சுழற்சியை வென்ற சென்னை அணித்தலைவர் டோனி, பனிப்பொழிவை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து முதலில் மட்டையை பிடித்த கொல்கத்தாவுக்கு ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து பேரிடி விழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின் (0) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரின் (6) ஹர்பஜன்சிங்கின் சுழலில் சிக்கினார். 

இந்த சறுக்கலில் இருந்து கொல்கத்தா அணியினரால் மீள முடியவில்லை. சென்னை அணித்தலைவர் டோனி, வேகம்-சுழல் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தார். அவரின் வியூகத்தை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. ராபின் உத்தப்பா (11 ஓட்டங்கள்), நிதிஷ் ராணா (0) ஆகியோரை தீபக் சாஹர் வெளியேற்ற, அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பிடியை பலமாக இறுக்கினர். அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் (19 ஓட்டங்கள்), சுப்மான் கில் (9 ஓட்டங்கள்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. 

இதற்கு மத்தியில், இந்த ஐ.பி.எல் இன் அபாயகரமான ஆட்டக்காரர் என்று வர்ணிக்கப்படும் ஆந்த்ரே ரஸ்செல் 8 ஓட்டங்களில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஹர்பஜன்சிங் நழுவ விட்டார். இதே போல் அவர் 19 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த போது, எல்.பி.டபிள்யூ. கேட்டு டி.ஆர்.எஸ் முறைப்படி அப்பீல் செய்த போதும் பலன் கிட்டவில்லை. 

ஒரு கட்டத்தில் 79 ஓட்டங்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் ஊசலாடிய கொல்கத்தா அணியை மூன்று இலக்கத்தை எட்ட வைக்க கடைசி விக்கெட்டுக்கு வந்த ஹாரி குர்னேவின் துணையுடன் ரஸ்செல் தனி வீரராக போராடினார். இதனால் ஒற்றை ஓட்டங்கள் எடுப்பதை தவிர்த்த அவர் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்சரும், 20 ஆவது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியும் விரட்டி கவுரவமான நிலையாக தங்கள் அணியை 100 ஓட்டங்களை கடக்க வைத்தார். அத்துடன் தனது அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார். 

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சீசனில் கொல்கத்தா அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக கொல்கத்தாவின் குறைந்த ஸ்கோராகவும் இது அமைந்தது. தனது 6 ஆவது ஐ.பி.எல். அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 50 ஓட்டங்களுடன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 

சென்னை தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தீபக் சாஹர் வீசிய 4 ஓவர்களில் 20 பந்தில் ஓட்டங்கள் எதுவும் அடிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

பின்னர் எளிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. குறுகிய நேரமே நின்ற தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 17 ஓட்டமும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 14 ஓட்டமும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து நடையை கட்டினர். 

அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக செயல்பட்டனர். அதே சமயம் பனிப்பொழிவின் காரணமாக கொல்கத்தா பவுலர்கள் தடுமாற்றத்துடன் பந்து வீசினர். அணியின் ஸ்கோர் 81 ஓட்டங்களை களை எட்டிய போது, அம்பத்தி ராயுடு 21 ஓட்டத்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 111 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 43 ஓட்டங்களுடனும், கேதர் ஜாதவ் 8 ஓட்டங்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 

6 ஆவது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5 ஆவது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா அணிக்கு இது 2 ஆவது தோல்வியாகும். 

சென்னை அணி ஜெய்ப்பூரில் நாளை (11) நடக்கும் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4800,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11021,கட்டுரைகள்,1387,கவிதைகள்,67,சினிமா,318,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3184,விளையாட்டு,726,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2073,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: IPL 2019 - CSK இன் பந்துவீச்சில் சிக்கித் தவித்த KKR
IPL 2019 - CSK இன் பந்துவீச்சில் சிக்கித் தவித்த KKR
https://2.bp.blogspot.com/-6Lfdd9QndsA/XK4qq0qVgBI/AAAAAAABVk8/GXUmBCQLGSA57QUc2wemsGKveZ94zdHEQCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-6Lfdd9QndsA/XK4qq0qVgBI/AAAAAAABVk8/GXUmBCQLGSA57QUc2wemsGKveZ94zdHEQCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/04/cricket_45.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/04/cricket_45.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy