haiiii

வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு வழங்கப்படும் - பிரதமர் ரணில்

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த துயர்மிக்க சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் அரச செலவில் புனரமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு அலரிமாளிகையில் விஷேட அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்திர தன்மையை சீர்குழைப்பதற்கு ஏதேனும் குழு ஒன்று முயற்சிக்குமாயின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புடன் அதனை ஒடுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பிரதமர் என்ற ரீதியில் நாட்டில் ஸ்திய தன்மையை உறுதிசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பிரதமர் பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படமாட்டாது. இதற்கமைவாக ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு சபையை கூட்டி முப்படை மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டது. 

இந்த பேச்சுவார்தையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தெளிவுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்தை நடத்தி பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். காயங்களுக்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சருடன் பேச்சுவார்தை நடத்தி 2 தினங்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்தை நடத்தி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

சபாநாயகருடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தை செவ்வாய்க்கிழமை கூட்டுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதேபோன்று எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடனும் பேச்சுவார்தை நடத்தி பொலிஸாருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

இதே போன்று அனர்த்தம் இடம்பெற்ற கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று ஏற்பட்ட பாதிப்புக்களை கண்டறிந்தேன். இதன் போது உயிரிழந்த நபர்களுக்காக நஷ்டஈடு வழங்குவதற்கும் பாதிக்கபட்ட கிறிஸ்தவ தேவாலயங்களை புனரைமப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக தெலைபேசியின் ஊடாக மாகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. அவர்கள் சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். அமைதியை பாதுகாப்பதற்காக அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பை நான் பாராட்டுகின்றேன்.

இதே போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு என்னுடன் உரையாடினார். பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார் . இதே போன்று ஈரானுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்தார்.

நேபாளம் நாட்டின் பிரதமர் கே.பி சர்மா ஒளியின் சார்பில் அந்நாட்டு வெளிநாட்டு அரச தலைவர் மற்றும் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்தார். இந்த குழு தொடர்பில் வெளிநாட்டு தொடர்புகளை கண்டறிவதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்புகள் எமக்கு அவசியம். இன்று (நேற்று) மாலை அமைச்சர்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்று இரவும் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

வெடிப்பு சம்பவத்தினால் இதுவரையில் 200 பேருக்கு மேற்பட்டோர் உயிழந்துள்ளனர் . இதே போன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உயிழந்துள்ளனர். இது தொடர்பில் எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனர்த்தம் தொடர்பில் ஏதேனும் தகவல் முன்னதாக கிடைத்திருந்ததா? அதன் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை இது குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நான் அடங்கலாக அமைச்சர்களுக்கு தெளிவுப்படுத்தப்படாமை இதனுடன் தொடர்புபட்ட மற்றுமொரு விடயமாகும் இருப்பினும் முதலாவதாக செய்யப்பட வேண்டியது நாட்டில் ஸ்திர தன்மை சீர்குழைவதற்கு இடம் அளிக்காது ஸ்திர தன்மையை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த பயங்கரவாதம் சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை விசாரணை செய்வதுடன் வீடுகளில் மறைந்திருப்போரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டு தாரிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சம்பவங்களை சிறிய சம்பவமாக மதிப்பிட முடியாது. இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

விசாரணையின் போது பொலிஸார் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மைக்கு புறம்பான அல்லது வதந்திகள் காரணமாக பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேறுவது மாத்திரம் ஆகும். 

இதனால் அமைதியான முறையில் செயற்பட்டது போன்று தொடர்ந்தும் அமைதியான முறையில் செயல்பட்டு விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அனைத்து இலங்கை மக்களிடமும் கேட்டு கொள்கின்றேன் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த சிரமமான சந்தர்ப்பத்தில் அமைதியை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முப்படையினர் மற்றும் பொலிஸாரைப் போன்று மதத் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏதேனும் பயங்கரவாத செற்பாட்டை ஏதேனும் குழு ஒன்று முன்னெடுக்குமாயின் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்பை பெற்று இந்த பயங்கரவாதக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடும் உறுதிப்பாட்டுடன் செயல்படுவாதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

சமாதானத்துடன் செயல்பட்டு நாம் அனைவரும் எமது முன்னுள்ள சவாலை வெற்றி கொள்வதற்கு ஒன்றாக கைக்கோர்த்துக்கொள்ள முன்வருமாறு அன்புமிக்க உங்கள் அனைவரிடமும் இறுதியாக  கேட்டுக் கொள்கின்றேன்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு வழங்கப்படும் - பிரதமர் ரணில்
வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு வழங்கப்படும் - பிரதமர் ரணில்
https://4.bp.blogspot.com/-masJWWKtwNI/XL1fh_PF0eI/AAAAAAABWBA/ZV30oxt_jpsrD2pdzYNvBA7WTmRPJKMHwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://4.bp.blogspot.com/-masJWWKtwNI/XL1fh_PF0eI/AAAAAAABWBA/ZV30oxt_jpsrD2pdzYNvBA7WTmRPJKMHwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/04/prime_22.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/04/prime_22.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy