haiiii

அரசியல் பிரபலங்களின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்திகள்


சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இப்பாரினில் ஜீவராசிகள் இருப்பினை உறுதிப்படுத்துவதில் மிக முக்கிய காரணிகளாக விளங்கும் சூரியனையும் சந்திரனையும் பண்டுதொட்டு மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர். அவ்வண்ணம் இயற்கையை தெய்வீகமாக மதித்தல் சாதாரண குடிமக்களினதும் அரசினதும் வழக்கமாக இருந்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி வெளியிட்டுள்ள சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியை கீழே காணலாம்.


சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க

புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவதற்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இயற்கையின் புது வசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சிங்களத் தமிழ் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும். 

புத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவினைப் புதுப்பித்துக் கொள்வதுடன், மனித சமூகத்தில் அன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளன. 

வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவாகும். புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவதற்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். 

இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஷபக்‌ஷ

செல்வச்செழிப்புக்கான பால் பொங்கும்போதும்இ புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்கும்போதும்இ உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஷபக்‌ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களஇ தமிழ் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான தேசிய திருவிழாக்களில் ஒன்றாகும். அது மட்டுமின்றி உலகெங்கிலும் குடியிருக்கும் அனைத்து இலங்கை சமூக மக்களும் கொண்டாடி வருகின்றனர். இது ஒருவருக்கொருவர் உறவுகளை இணைத்துஇ பலப்படுத்துவதற்கும்இ உலகெங்கும் உள்ள வளமான கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது. 

இந்தப் புத்தாண்டானது புதிய துவக்கத்தை உணர்த்துகிறது. இதுவரையான குறைபாடுகள் மற்றும் பின்னடைவுகளைப்
பின்னுக்குத் தள்ளுகிறது. நாட்டினை முன்னோக்கி நகர்த்துவதற்கு உறுதியளித்திருக்கும் ஒரு புதிய உணர்வு அளிக்கிறது. சிந்தனையிலும் செயலிலும் முற்போக்கு எண்ணத்தை விதைக்கிறது. நட்பு மற்றும் ஒற்றுமையால்  எல்லாத் தீமையையும்இ பகைமையையும் தவறான எண்ணங்களையும் தூக்கி எறியப்படுகிறது. தேசத்தை முன்னோக்கி நகர்த்துவது நம்பிக்கையேஇ அது மக்களுக்கு இடையே உறவுப்பலத்தை உருவாக்குகிறதுஇ எந்தவொரு பெரிய பின்னடைவாக இருந்தாலும் உரிய தீர்வை அது எட்டுகிறது.

இந்தப் புத்தாண்டை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்கையில் உங்களிடம் நான் கேட்பதுஇ வளமான இலங்கைக்கான உங்களின் பங்களிப்பை செலுத்துங்கள் என்பதே. உங்களால் மாற்ற முடிந்தவற்றை கண்டறிந்துஇ உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள். இலங்கையின் செல்வச்செழிப்புக்கான பயணம்இ தனிமனித கெளரவத்தைப் பாதுகாத்தல் மற்றும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைத்தல் உள்ளிட்டவை இந்த அர்ப்பணிப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

செல்வச்செழிப்புக்கான பால் பொங்கும்போதும்இ புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்கும்போதும்இ உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம். இச்சமயத்தில் வளமான மற்றும் வெற்றிகரமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க விழைகிறேன். ஒற்றுமையுடன் இந்த புத்தாண்டு விழாவினை கொண்டாடுவீர்கள் எனவும் அஃது ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானமும் சௌபாக்கியமும் நிறைந்த இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இன்பம்பொங்கும் உவகைமிகு உன்னத ஆண்டாக மிளிர இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.


சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ள அமைச்சர் வஜிர அபேவர்தன

மனிதம் நேயம்மிக்கவர்களாக இன்றைய நாளில் சகலரும்  மாண்புடன் வாழப்பிரார்த்திப்போம். அத்துடன், சமாதானம், செளபாக்கியம், சுபீட்சம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டாக, இப்புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மலரப் பிரார்த்திப்பதாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன,  தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிங்களம், தமிழ் மக்கள் அனைவரும் இன்று உள்ளக்களிப்புடன் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். 

இவர்களுக்கிடையில் இன்று பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு, இப்புத்தாண்டை சிறப்புறக் கொண்டாட வாய்ப்புக்கள் உண்டாகின்றன. இவ்வாறான சிறந்த தன்மை, ஏனைய நாட்களிலும் எம் சமூகத்தாரிடம் வரவேண்டும். இதுவே இன்றைய எமது எதிர்பார்ப்புமாகும். 

அரசாங்கம் என்றவகையில், சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையையும், இன ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே, எமது பிரதான நோக்கமாகும். இந்த நோக்கம் இன்று மிகவும் துள்ளியமாக இடம்பெற்று வருவதையும் கண் கூடாகப் பார்க்கின்றோம். 

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இன்று இன ஐக்கியத்திற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். இது இன்றைய காலகட்டத்தில் பாராட்டப்படவேண்டிய விடயமாகும். 
நாம் வாழும் காலத்தில் எல்லோருடனும்  எப்பொழுதும் அந்நியோன்யமாக வாழ்வோமென்றால், இதுதான் இன்று எமது இலங்கை நாட்டுக்குத்தேவையாகும் சமூகத் தேவைப்பாடாகும்.

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி  தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்

பிறந்திருக்கும் “விகாரி” சித்திரை புதிய வருடத்தை உரமான நம்பிக்கையோடு உயிர்ப்புமிக்கதாக்குவோம். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் புது வருட வாழ்த்து செய்தி

சிறந்ததும், மனப்பூர்வமானதுமான மாற்றங்களை ஆக்கபூர்வமாக ஏற்படுத்தி பிறந்திருக்கும் சித்திரை வருடத்தில், நாமும் நமது சிந்தனைகளில், எண்ணங்களில், செயற்பாடுகளில் புதியவற்றினை புத்துருவாக்கம் பெற செய்ய வேண்டும்.

இவ் தலைமுறையினர் யதார்த்தமான சிந்தனைகளை ஏற்படுத்துபவர்களாகவும், அவற்றிற்கு முதலிடம் வழங்குபவர்களாகவும் உள்ளனர். நாம் எமது பாரம்பரியமிக்க கலை கலாச்சார பண்பாடுகளின்  ஊடாகவும் அவற்றினை மிளிர செய்து, நிகழ்காலத்திலும்  பாரம்பரியங்களிநூடாக புதியனவற்றை பரிணமிக்க செய்ய வேண்டும்.

பிறந்திருக்கும் விகாரி புதுவருடம் அனைவருக்கும் சுபீற்சம் மிக்கதாக அமைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும்  தெரிவித்து கொள்கிறேன்.

நமது முன்னோர்களின் வழிகாட்டலில் நீண்டகாலமாக எம்மால் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியங்களும் முன்னோர்களின் ஆசீர்வாதமும்  அனைவருக்கும் புத்தெழுச்சியை வழங்க தொடர்ந்தும் நாம் புதிதாக பிறக்கும் வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இயற்கையின் இருப்பிடத்தில் நாம் புதிதாய் தோற்றம் பெற்று, எமக்கு தேவையானவற்றை எற்படுத்துவதும், அதனை நோக்கி பயணிப்பதுமாக எமது வாழ்வு பயணிக்கின்றது. தோற்றுவிப்பதும் புதுப்பிப்பதும் நமது கடின முயற்சிகளின் பலாபலன்களே.

பிறக்கும் வருடத்தை நம்பிக்கையோடும் பல்வேறு எதிர்பார்புக்களோடும் நோக்குகின்றோம். தோற்றம் பெறும் ஒவ்வொரு விடயங்களும் தாக்கங்களுக்கான மறுதாக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே நமக்கு ஒவ்வாத விடயங்களை புதிய நாட்களில், புதிய நம் பயணங்களில் புறம் அகற்றி விலக்கி கொள்வது வரவேற்கப்பட வேண்டியது.

தொன்மைகளை தொடரும் நாம் அவற்றை அடையாளமிக்க ஒன்றிணைந்த பலமான பன்மைத்துவத்திற்கு மூலதனமாக்குவோம். புதுமைகள் புத்தெழுச்சி பெறட்டும். மாற்றங்கள் மலரட்டும்   

சிறந்த அறுவடைகளை பெற்று கொண்டாடும் இவ் புதிய வருடம் நமது எதிர்பார்புக்களை பூர்த்தி செய்யும் ஆண்டாக அமைவதற்கு, நாம் நமது முயற்சிகளை சாதகமாக்கி உயிர்ப்புமிக்கதாக்குவோம்.

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தி  தெரிவித்துள்ள  யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்

இன்று மலரும் விகாரி வருடம் எம் மத்தியில் உள்ள வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். கடந்த காலங்களில் நடந்தேறிய துன்பங்களையும், துயரங்களையும் மறந்திடுவோம். 

விகாரியை தொடர்ந்துவரும் காலம்இ மக்கள் மனதில் மகிழ்வுடையதாக அமையட்டும் என வாழ்த்தி எனது புதுவருட வாழ்த்தினைத் தெரியப்படுத்துகின்றேன். 

சித்திரை புத்தாண்டு இலங்கையில் வாழும் ஈரின மக்களாகிய தமிழர்களில் இந்துக்களுக்கும், சிங்களவர்களுள் புத்தமதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுப் பண்டிகையாக உள்ளது. எனவே இது ஒரு தேசிய திருநாளாகும். எனவே நாடெங்கும் அமைதி நிலவ வேண்டுமென இந்த புனித நாளில் இறைவனை வேண்டுகிறேன். 


அனைவரும் வாழ்க வளமுடன்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4805,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11027,கட்டுரைகள்,1388,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3185,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2074,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: அரசியல் பிரபலங்களின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்திகள்
அரசியல் பிரபலங்களின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்திகள்
https://4.bp.blogspot.com/-pBsvLS68mF8/XLLWiqcv_2I/AAAAAAABVsQ/2JNKlWEBapQ5cPnWQkFSE7X3EFcqcbNfwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://4.bp.blogspot.com/-pBsvLS68mF8/XLLWiqcv_2I/AAAAAAABVsQ/2JNKlWEBapQ5cPnWQkFSE7X3EFcqcbNfwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/04/wish.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/04/wish.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy