haiiii

அமைச்சர் ரிஷாத் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு

- ஊடகப்பிரிவு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு 

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே ஆசு மாரசிங்க இவ்வாறு கூறினார். இராணுவத்தளபதியுடன் தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவை பற்றி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ஆசு மாரசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களும் சுத்தப்பொய் எனவும் தன்னை பழி வாங்குவதற்காக இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது அரசியல் தேவையை சில எம்.பிக்கள் அடைந்து கொள்வதற்கு முயற்சிப்பதற்காகவும் தெரிவித்தார். 

தனக்கு ஆலோசகராக மெளலவி எவறும் இல்லையெனவும், தனது தம்பி ஒருவர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் பொய்யானது எனவும் அத்துடன் இணைப்புச் செயலாளர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொறுப்புடன் தாம் கூறுவதாகவும் சபையில் தெரிவித்தார்.

தனக்கு தெரிந்தவரும், முஸ்லிம் சமய விவகார அமைச்சில் ஆலோசகாராக பணிபுரிபவருமான ஒருவர், தனது மகனை முகமூடி அணிந்த சிலர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகவும், அவர் பற்றிய தகவலை பெற்றுத்தருமாறு தன்னிடம் வேண்டினார். மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் துன்பப்பட்டிருக்கும் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதே மனிதாபிமான செயலாகும். 

அந்த வகையில் பொலிஸ் பேச்சாளர் ருவான் குண்சேகரவுடன் தான் தொடர்புகொண்ட போது, பொலிஸார் அவ்வாறான ஒருவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறி இராணுவத்தளபதியிடம் அறிந்துகொள்ளுமாறு தெரிவித்தார். அந்த வகையிலையே நான் இராணுவத்தளபதியுடன் தொடர்புகொண்டு அவர் பற்றி விசாரித்தேன், எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை இந்த சபையிலையே வலியுறுத்தி கூற விரும்புகின்றேன். 

இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,5053,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11190,கட்டுரைகள்,1407,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3271,விளையாட்டு,730,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2084,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,
ltr
item
Vanni Express News: அமைச்சர் ரிஷாத் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு
அமைச்சர் ரிஷாத் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு
https://2.bp.blogspot.com/-VcJzxGPDbG8/XOUTF54EodI/AAAAAAABWdc/GZEl64RT1k05wCmAT-8_uTcv5cr1pZH8ACLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-VcJzxGPDbG8/XOUTF54EodI/AAAAAAABWdc/GZEl64RT1k05wCmAT-8_uTcv5cr1pZH8ACLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/05/aasu_22.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/05/aasu_22.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy