haiiii

சந்திரிக்கா அம்மையாரின் வியூகம் சரியாப் படலாம்.

- கிண்ணியா ஐனி சவூதியில் இருந்து.

இலங்கையின் இரண்டு தேசிய கட்சிகளான சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இவை இரண்டிலும் அதை ஸ்தாபித்தவரின் கடைசி பரம்பரை இருக்கும் வரை எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை கடந்து சென்ற வரலாறுகள் சொல்லும்.

நாடு சுதந்திரம் அடைந்து நடந்த முதலாவது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் டி எஸ் சேனாநாயக்க, அவர் மகன் டட்லி சேனநாயக்கா  பண்டாரநாயக்க ராஜபக்ஷ என ஒரு பெரிய அணி இணைந்து போட்டி இட்டு நாட்டை ஆட்சி செய்த வேளை 1960 ஆம் ஆண்டு டி எஸ் சேனாநாயக்க அவர்களுக்கு வயதாகியதால்  கட்சியின் பொறுப்புகளை தனது மகன் டட்லி சேனநாயக்காவுக்கு வழங்க முற்பட்ட வேளையில் இது குடும்பக் கட்சி இல்லை பொதுக் குழுவில் பிரகாரம் தீர்மானிக்கும் படி பண்டாரநாயக்க அணி வைத்த ஆலோசனை எடுபடாது போக பண்டாரநாயக்க , ராஜபக்ஷ என சிலர் விலகி வந்து 1960 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சி தொடங்கி அதே ஆண்டில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

பின்னர், பண்டாரநாயக்க மரணம் சென்றதும் அவர் மனைவி சிரிமா அம்மையார் ஆட்சியில் அமர்ந்து கட்சியை வழி நடத்தினார். இருந்தும், 1977 ஆம் ஆண்டு  ஜே ஆர் அவர்களிடமும்  1989 ஆம் ஆண்டு பிரேமதாசா அவர்களிடமும் தோல்வி அடைந்து கட்சி பலவீனமானது இந்தச் சந்தர்பங்களில் 1989 ஆம் ஆண்டு சாமல் ராஜபக்ஷ மற்றும் நிர்மல் ராஜபக்ஷ கட்சிக்குள் வந்து மஹிந்தா ராஜபக்ஷ கைக்குள் சுதந்திரக் கட்சி போகும் ஒரு நிலை தோன்றியது. 

இந்த சூழ்நிலையில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவை  மேல் மாகாண சபை தேர்தலில் இறக்கி அவரை வெற்றி பெற வைத்து மேல் மாகாண சபை முதலமைச்சராகக் கொண்டு வந்தது மட்டும் இன்றி  இந்த சூழலைப் பயன்படுத்தி அவரை  ஜனாதிபதியாக வெற்றி பெற வைத்தார்கள். பாராளுமன்றம் நுழையாமல் ஒரேயடியாக ஜனாதிபதியாக வந்தவர் சந்திரிக்கா ஒருவரே! இதன் விளைவாக ராஜபக்ஷ அவர்கள் கைக்கு போக வேண்டிய கட்சித் தலைமை சந்திரிக்காவின் கைக்கு வந்தது. பின் நாளில் சந்திரிக்கா குடும்பத்தில் தகுதியான யாரும் இல்லாத நிலையில் ராஜபக்ஷ ஜனாபதியானாலும் அவருடைய பரம்பரையினர் கை போகாத வாறு  சந்திரிக்கா மைத்திரி அவர்களை வைத்து காய் நகர்த்தி மீட்டெடுத்தார். இருந்தும் மைத்திரி  அவர்களின் நிர்வாக திறன் இல்லாத காரணத்தால் கட்சி உடைந்து போனது. இதை மீண்டும் மீட்டெடுப்பது சந்திரிக்காவின் ஒரு கடமையாகும்.  கட்சி  ராஜபக்ஷ கையில் போனால் அண்ணன், தம்பி, மகன் என்று மீண்டு வர முடியாது போகும் நிலை வரும் என்பதை நங்கு உணர்ந்த அம்மையார்  அதுக்கு வழியைத் தேடிய வேளை  சஜித் அவர்கள்தான் என இனம் கண்டு எந்த வகையிலும் ஒத்துப் போகாத ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளாமல் சஜித்துக்கு ஆதரவாக கட்சி மீட்கும் களத்தில் இறங்கிவுள்ளார்.

பிரேமதாசா அவர்களின் மறைவிற்கு பின்னர் 17 வருடங்கள் கழித்து சஜித் ஐக்கிய தேசிய கட்சியில் வந்தது போல் சந்திரிக்கா அவர்கள் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் தனது மகனை ஹம்பகா மாவட்டத்தில் களம் இறக்கலாம் அல்லவா! அதன் மூலம் கட்சியை ஒழுங்கு படுத்தி மீண்டும் தலைமைத்துவத்தை தனது குடும்பத்துடன் இணைக்கலாம் அல்லவா!

இதில் சஜித் வெற்றி பெற்றால் ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்தவர்களை ஒன்று திரட்டி கட்சியை வளப்படுத்தி பொதுத் தேர்தலைக் கையாளலாம். இதுக்கு சாதகமாக அமையப் போவது பெரமுன கட்சி. அதாவது தற்போது ராஜபக்ஷ குடும்பம் இப்ப சுதந்திரக் கட்சியில் வரமாட்டார்கள். அவர்கள் பெரமுன கட்சியினர். இதனால் சுலபமாக சுதந்திரக் கட்சியினரை வெளியே கொண்டு வர முடியும். 

அதேநேரம் கோத்தபாய அவர்கள் வென்றால் ரணில் சஜித் மேல் குற்றம் சுமத்தி கட்சி தலைமையை விடமாட்டார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியில் தனக்கு விசுவாசமாக உள்ளவர்களைப் பிரித்து எடுத்து தனிக் கட்சி ஒன்று தொடங்கி அல்லது தனது கணவனின் மக்கள் கட்சி மூலம் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதன் பிரகாரம் பல உறுப்பினர்களை பெற்று மீண்டும் அவர்களைக் கொண்டு சுதந்திரக் கட்சியை தன் வசப்படுத்திக் கொள்ளுவார் அம்மையார் என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.

நன்றி.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,5183,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11197,கட்டுரைகள்,1407,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3284,விளையாட்டு,730,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2084,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,
ltr
item
Vanni Express News: சந்திரிக்கா அம்மையாரின் வியூகம் சரியாப் படலாம்.
சந்திரிக்கா அம்மையாரின் வியூகம் சரியாப் படலாம்.
https://1.bp.blogspot.com/-XnMYteDAJjM/Xcavd9UTrjI/AAAAAAABXdY/KCQggdEv4CwMRRINmwmamxrm1jJkmC0lQCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-XnMYteDAJjM/Xcavd9UTrjI/AAAAAAABXdY/KCQggdEv4CwMRRINmwmamxrm1jJkmC0lQCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/11/article_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/11/article_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy