haiiii

மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை

கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து அமைக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் தவறானவை என ஐக்கிய மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கடந்த அரசாங்கம் வெறுப்பை தூண்டிய அரசாங்கம் என கூறினார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் FCID போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்துடன் நேரடி தொடர்பை கொண்டிருந்தாக தெரிவித்த அவர் பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாகவும் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகள் அறியாமல் இருப்பது எவ்வாறு என கேள்வி எழுப்பிய அவர் அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களை பிரச்சினைக்குள் சிக்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை உறுதியாவதாக அவர் தெரிவித்தார்.

அதனால் சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அவர் அதற்கு சுயாதீனமானதும், நியாயமான பொலிஸ் துறை ஒன்று அவசியம் எனவும் கூறினார்.

கடந்த காலத்தில் FCID க்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி பல முக்கியமான கருத்துக்களை வெளியிட்டதாகவும், அதனால் அவ்வாறான அனைத்து நிறுவனங்களும் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து செயற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நல்லாட்சி என்ற பதத்தை உபயோகித்து அதற்கு எதிரான ஆட்சியை கடந்த அரசாங்கம் நடத்தியதாக தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டதால் மக்கள் ஏகோபித்த தீர்மானத்தை எடுத்து கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியதாகவும் கூறினார்.

இதன் போது கருத்து nதிவித்த சீ.பீ.ரத்நாயக்க FCID க்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

01. பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பேசப்படுகின்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்கின்றீர்கள்?

இதற்கு பதில் வழங்கிய லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இரண்டு வகையான காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது.

அதாவது அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியல் இல்லாது செய்யப்படும் என பயப்படுகின்றனர் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தாலும் ஓய்வூதியம் இல்லாது போகும் எனவும் கூறினார்.

ஆகவே நன்றாக சிந்தித்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,5329,இரங்கல் செய்தி,1,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11297,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3319,விளையாட்டு,734,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2090,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,
ltr
item
Vanni Express News: மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை
மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை
https://1.bp.blogspot.com/-jeY9_l_-yog/Xd1ru8p6lII/AAAAAAABYL8/2-D-1_V7x1IKTJOdtDRrbgHd-gk6ZI5NACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-jeY9_l_-yog/Xd1ru8p6lII/AAAAAAABYL8/2-D-1_V7x1IKTJOdtDRrbgHd-gk6ZI5NACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/11/laxman.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/11/laxman.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy