பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷ முன்வைத்த மனு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வெளிநாடு செல்ல தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்படவில்லை எனவும் இருப்பினும் இந்த விடயத்தினை நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்காக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட கருத்துளை ஆராய்ந்த நீதிபதி நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.