எதிர்காலத்தில் நாட்டை கட்டி எழுப்ப எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேரர்களின் பூரண ஒத்துழைப்பும், ஆசிர்வாதமும் கிடைக்கும் என பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (24) பெபிலியான சுனேத்திரா தேவி பிரிவேனாக்கு சென்று மெதகொட அபேதிஸ்ஸ தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
இதன் போதே பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் ஆசி வழங்கி உரையாற்றிய பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர், நாட்டுக்காக அனைத்து தேரர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறினார்.
எந்தவித பிரதிலாபங்களையும் எதிர்பார்த்து அவர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு பிக்குகள் தொந்தரவாக அமைய போவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தேரர் கூறினார்.
நாட்டுக்கு வேலை செய்யக்கூடியவர்களும், கல்விமான்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
அது ஜனாதிபதியின் பொறுப்பு எனவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் போது ஊழல் மோசடி அற்றவர்கள் தெரிவாக வேண்டும் எனவும் அவ்வாறு தெரிவானால் அதற்கு தேரர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது விகாரையில் கூடியிருந்த மக்களால் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.