haiiii

5 தடவைகள் பிரதமர் பதவி வகித்த ரணில் விடை பெற்றார்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்த பலரும் இன்று தத்தமது அமைச்சுப் பதவிகளுக்கு விடை கொடுத்தனர்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்த ரணில் விக்ரமசிங்க இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் அவர் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றார்.

இலங்கையில் பல தடவைகள் பிரதமர் பதவியை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவையே சாரும்.

1993 ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமரான அவர், 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தவுடன் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவையாகவும் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக தெரிவுச் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தோல்வியடைந்து பிரதமர் பதவியில் இருந்து விடைப்பெற நேரிட்டதுடன் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனாவரி 9 ஆம் திகதி மூன்றாவது தடவையாகவும் பிரதமரானார்.

எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் ஐந்தாவது தடவையாகவும் பிரதமர் பதவியை ஏற்றார்.

ஐந்து தடவைகள் பிரதமர் பதவியை வகித்திருந்தாலும் அவரால் ஒரு அரசாங்க காலத்திலேனும் பிரதமர் பதவியை முழுமையாக வகிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,7,அரசியல்,5359,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11340,கட்டுரைகள்,1413,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3326,விளையாட்டு,736,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2092,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,
ltr
item
Vanni Express News: 5 தடவைகள் பிரதமர் பதவி வகித்த ரணில் விடை பெற்றார்
5 தடவைகள் பிரதமர் பதவி வகித்த ரணில் விடை பெற்றார்
https://1.bp.blogspot.com/-a0kbQSCjvb0/XdbMKw2u0CI/AAAAAAABYCk/B_hCcPnrrLYcuFzbjdxP1dI6d97jXJTOACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-a0kbQSCjvb0/XdbMKw2u0CI/AAAAAAABYCk/B_hCcPnrrLYcuFzbjdxP1dI6d97jXJTOACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/11/ranil_91.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/11/ranil_91.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy