haiiii

இலங்கையை உலுக்கிய விமான விபத்துக்கு இன்றுடன் 45 வயது - ஒரு சிறப்புப்பார்வை

1974 ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடமளவில் அக்கரபத்தனை நோர்வுட் காசல்ரீ ஊடாக சென்ற எயார் டின் டி.சி.08 என்ற விமானம் சப்தகன்னி மலை உச்சியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி இன்றோடு 45 வருடங்கள் ஆகின்றன.

ஒவ்வொரு வருடமும் இந்த விமானம் விபத்துக்குள்ளான திகதியன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திவருவது வழக்கம்.

அந்தவகையில் இன்று (04) உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தபட்டது. இந்த விபத்தில் மொத்தம் 190 பேர் பலியாகியிருந்தனர்.

இதில் 189 பேரின் சடலங்கள் சபதகன்னியின் மலை அடிவாரத்தில் நல்லடக்கம் செய்யபட்டதோடு ஒருவரின் சடலம் மாத்திரம் மற்றுமொரு விமானத்தின் ஊடாக இந்தோனேஷியா நாட்டுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அன்று முதல் இன்று வரை 45 வருடகாலமாக இந்த விமான விபத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக ஒவ்வொரு வருடமும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சப்தகன்னி மலை உச்சியில் மோதுண்டு விபத்துக்குள்ளான விமானம் துண்டு துண்டாக சிதறிய நிலையில் காணப்பட்ட வேளை மார்டின் எயார்.டி.சி.08 விமானத்தின் டயர் ஒன்று மாத்திரம் எஞ்சியிருந்தது.

குறித்த டயர் விமலசுரேந்திர நீர் தேக்கத்திற்கு அருகாமையில் வைக்கபட்டு ஒவ்வொரு வருடமும் குறித்த விமானம் விபத்துக்குள்ள தினத்தன்று உயிர் நீத்த 190 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

1974ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி இந்தோனேஷியா நாட்டில் இருந்து மக்கா நோக்கி சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

இந்த விமானம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேட்டி லயனல் ரனசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்த விமானம் 1974.12.04 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. அன்றைய தினம் இந்த விமானம் நோர்ட்டன் நகரபகுதி ஊடாக செல்வதை நான் அவதானித்தேன்.

நான் அவதானித்து சில நிமிடங்ளில் விமானம் ஒன்று சப்தகன்னி மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவந்தது.

உடனடியாக விமானபடையின் உலங்கு வானூர்தி வந்து சம்பவத்தை பார்வையிட்டது. அதன் பிறகு நானும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆறுபேரும் இணைந்து மலைபகுதிக்கு சென்றோம்.

அப்போது விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் இனங்காண முடியாத ஒரு சூழ்நிலையே காணப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் அனைத்தும் சேகரிக்கபட்டு நோர்ட்டன் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குவித்த போதுதான் இந்த டயர் மாத்திரம் எடுக்ககூடியதாக இருந்தது அதன் பிறகு தான் இந்த டயரில் விமானத்தின் பெயரை எழுதி அதன் ஞாபகார்த்தமாக தாம் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அன்று முதல் இன்று வரை வெளிநாட்டவர்களும் உள் நாட்டவர்களும் இதனை பார்வையிட்டு செல்லுகின்றனர். இந்த விபத்து இடம்பெறும் போது எனக்கு வயது 36 தற்பொழுது வயது எனக்கு 82 என தெரிவித்தார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,7,அரசியல்,5357,இரங்கல் செய்தி,2,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11337,கட்டுரைகள்,1412,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3325,விளையாட்டு,736,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2092,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,
ltr
item
Vanni Express News: இலங்கையை உலுக்கிய விமான விபத்துக்கு இன்றுடன் 45 வயது - ஒரு சிறப்புப்பார்வை
இலங்கையை உலுக்கிய விமான விபத்துக்கு இன்றுடன் 45 வயது - ஒரு சிறப்புப்பார்வை
https://1.bp.blogspot.com/-4IEZZdRz7Kw/XeeataX7U-I/AAAAAAABYcc/GjZ21OvbaZgAnGy0a7tN8lG8-I_NIV1TwCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-4IEZZdRz7Kw/XeeataX7U-I/AAAAAAABYcc/GjZ21OvbaZgAnGy0a7tN8lG8-I_NIV1TwCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/12/45.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/12/45.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy