haiiii

இஸ்லாமிய நாடுகளின் உணர்வுகளை தட்டிய மரணம் - பகுதி 02

- கிண்ணியா ஐனி

பகுதி ஒன்றில் 1979 ஆம் ஆண்டில் இருந்து ஆராய்ந்த போது பலர் இன்னும் கொஞ்சம் பின்னோக்கி தகவல்கள் தரும் படி என்னிடம் வினவினார்கள் அதனால், சற்று முன்னோக்கிப் பார்ப்போம்.

இதனால், 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முகமட் மொசாடக் அவர்களில் இருந்து 1973 காலம் வரை இந்த இரண்டாம் பாகத்தில் அறிந்து கொள்வோம். 

அதாவது, 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவும் பிரிட்டனும் உலகம் முழுவதும் தங்களது வருமானத்தை நோக்கி உலக நாடுகளில் வளங்களைத் தேடிக் கொண்டிருந்த வேளையில் ஈரானிய எண்ணெய் வளங்களை நோக்கி பாயத் தொடங்கியது. அந்த நேரத்தில் அன்றைய ஈரான் அதிபர்  மொசாடாக்  மக்களுக்கு நல்ல பல சலுகைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து. ஒரு சிறந்த ஆட்சியை செய்து கொண்டு இருந்தார். பின்னர் அவர் அமெரிக்காவின் சூழ்ச்சி அறிந்து தனது நாட்டிலுள்ள அனைத்து எண்ணெய் வளங்களையும் தேசிய மயமாக்கி அரச உடைமையாக்க முனைந்தார். அதாவது, தனியார் வசம் இருந்தால்  பங்குதாரர்களாக ஆட்டையப் போடலாம் என்று கங்கணம் கட்டி  இருந்த  அமெரிக்கா , பிரிட்டனுக்கு மிகவும் பெரிய ஏமாற்றத்தை இந்த திட்டம் கொடுத்தது.

இதனால், ஈரானில் அடுத்த கட்ட செல்வாக்கு கொண்டிருந்தது முகமது ரஷாக்கை முன்னிருத்தி அமெரிக்கா நல்லாட்சி செய்த மொசாடாக்குக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு செய்ய தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து ஈரானில் உள்ள சில மக்களை அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய வைத்த அமெரிக்கா 1953 ஆம் ஆண்டு தனது சார்பில் ரஷாக்கை ஆட்சியில் அமர்த்தியது இதுதான் அமெரிக்காவின் அரபு தேசம் நோக்கிய  நகர்வாகும். 

இதற்கு பின்னர்தான் அரபு தேசம் முழுவதும் இன்றைய அழிவு நிலைக்கு வழி வகுத்த காலம். ரஷாக்கை வைத்து தனக்கு தேவையான விதத்தில் ஆட்சி செய்த அமெரிக்கா 1957 இல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று செய்து ஈரானில் உள்ளேயே முழுமையாக வந்து 1959 இல் அணுசக்தி ஆய்வு மையம் ஒன்றை அமெரிக்கா சொல்லி ஈரானில் நிறுவினார் ரஷாக். இதன் பின்னர் அணுசக்தி உற்பத்திக்கான அனைத்து பொருள்களையும் கொடுத்தது அமெரிக்கா. 1967 இல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்று இன்னும் பல உபகரணங்களை ஈரானுக்கு விற்பனை செய்து ஈரானை மிகப்பெரிய அணுசக்தி உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாற்றியது அமெரிக்காதான். என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

தனது வருமானத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளை வளர்த்து விடும் போது அது தனக்கு கட்டுப் படவில்லை என்றால் அந்த நாட்டை அழித்து சின்னா பின்னமாக்கி விடுவது அமெரிக்கா கடைபிடிக்கும் ஒரு நடைமுறை. இதன் அடிப்படையில் 1968 இல் அணுசக்தி ஆய்வு கட்டுப்பாடு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா போடுகிறது. அதுக்கு ஈரான் சொன்ன பதில் மேற்குலகை திரும்பி பார்க்க வைக்கிறது. அதாவது, " நாங்கள் இனிமேல் வெளியே இருந்து அணுக்களை வாங்க மாட்டோம் எமக்கு தேவையான அளவு அணுசக்தியை உள்நாட்டில் உற்பத்தி செய்வோம்" என்றது. இதுதான் இன்றுவரை ஈரானில் நடந்து கொண்டிருக்கிறது. அப்ப இந்த அணுசக்தி பிரச்சினைக்கு முழுக் காரணம் அமெரிக்காதான் என்பதை இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதேநேரம் 2015ம் ஆண்டு  போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னர் 1957 இல் முதல் முதலில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் போட்டு விட்டது இதிலிருந்து ட்ரம் வெளியே வந்துதான் இவ்வளவு பிரச்சினைகளையும் செய்கிறார்.

இப்படியே காலம் நகர்ந்து கொண்டு இருக்கையில் மக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி தன்னை எதிர்த்து கேள்வி கேட்போரை சிறையில் அடைத்தும் சர்வதிகார போக்கில் போனதைக் கண்ட மக்கள் அயத்துலா ருஹெல்லா கோமினி  தலைமையில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் . இந்த காலத்தில்   1973 ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரவேல் போர் தொடங்குகிறது. இதனால், உலகில் என்றும் இல்லாத வாறு உச்சத்தை தொட்டது எண்ணெயின் விலை. இதை நங்கு பயன் படுத்திய தலைவர் ரஷாக் அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்து கோடியில் புரண்ட போது அமெரிக்கா சொன்னது " உனக்கு எதிராக கிளர்ச்சி ஆரம்பமானது ஆதலால், அதி நவீன ஆயுதங்கள் நான் தருகிறேன் உன் இராணுவ படையை பலப் படுத்து" என்றதும் எண்ணெய் விற்ற பணத்தைக் கொண்டு அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி ஈரானில் குவித்தார் தலைவர் ரஷாக். 

இதனால், அளவுகடந்த சந்தோஷத்தில் அமெரிக்கா ரஷாக் அவர்களின் ஆட்சியை புகழ்ந்து நல்ல தலைவர்  மக்கள் மதிக்கும் நல்ல ஆட்சி என புகழ் மாலை சூடியது. இதனால் மறு நாள் ஆத்திரம் கொண்ட மக்கள் கிளர்ச்சி, ஒரு புரட்சி போராட்டமாக  உருமாறி போராட்டம் வெடிக்கிறது இதைத்தான் ( தெகரான் ) போராட்டம் என்று அழைக்கப் படுகிறது { இன்ஷா அல்லாஹ் இந்த போராட்டத்தில் இருந்து ஈரான் குடியரசாக மாறியதை பகுதி மூன்றில் பார்ப்போம்.}
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,7,அரசியல்,5543,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11612,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3381,விளையாட்டு,745,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2143,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,
ltr
item
Vanni Express News: இஸ்லாமிய நாடுகளின் உணர்வுகளை தட்டிய மரணம் - பகுதி 02
இஸ்லாமிய நாடுகளின் உணர்வுகளை தட்டிய மரணம் - பகுதி 02
https://1.bp.blogspot.com/-HZVpU0yzWhA/XhbndlF8M_I/AAAAAAABZnk/SGWElaVYF3AKJT6fvDqLDFd6GDnyVDRyQCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-HZVpU0yzWhA/XhbndlF8M_I/AAAAAAABZnk/SGWElaVYF3AKJT6fvDqLDFd6GDnyVDRyQCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/01/article_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/01/article_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy