haiiii

இலங்கையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் திருப்தி

இலங்கையில் கொரோனா வைரஸிலிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார்நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது திருப்தியை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையிடுவதில் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய நிலைமையை நிர்வகிப்பதற்கான அனைத்து அம்சங்கள் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சினால் நாடு முழுவதுமுள்ள சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா, வெளிவிவகாரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு, தபால் சேவை, மீன்வளம், இடர் முகாமைத்துவும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பிரதமர் இந்த அவதானிப்பை மேற்கொண்டார்.

தற்போதைய சிரமமான காலப்பகுதியிலும், நாடு திரும்ப விரும்புவோர் இலங்கைக்கு திரும்புவதற்கான பயணத்தை எளிதாக்குவதில் சீன அரசாங்கம் இலங்கையர்களுக்கு, குறிப்பாக சீனாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கு அளித்த ஆதரவை அவர் பாராட்டினார். இந்த மருத்துவ அவசர நிலைமையை புரிந்துகொண்டமைக்காக, அவர் சீன அரசாங்கத்திற்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடிய பயணிகளை தடைகாப்புத் திரையிடுவதற்கு சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், கொழும்பு மற்றும் பிற மாகாணங்களில் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு நோயாளர்களையும் கையாள்வதற்கான இலங்கை சுகாதார சேவைகளின் ஆயத்த நிலைகள் குறித்தும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விளக்கினார். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட ஒரேயொரு நோயாளர் மாத்திரமே கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த சீன நாட்டுப் பிரஜை அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் தெளிவுறுத்தப்பட்டது.

சீன நாட்டுப் பிரஜைகளின் பயணத்திற்கு எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை எனினும், சீனாவிலிருந்து வருபவர்கள் அனைவரும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இணையம் வாயிலான ஒன்லைன் வீசாவினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். சுகாதார அமைச்சு சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப தேவையான தடைகாப்புத் திரையிடலை குடிவரவு மற்றும் விமான அதிகாரிகளுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள உதவித் தூதரக அலுவலகங்கள் ஆகியவற்றினால் தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ள வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களின் நலனை எளிதாக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை மாணவர்கள் மற்றும் வுஹான் நகரிலுள்ள 33 குடும்பங்களை திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கை சீன அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறப்படுவதற்காக நிலுவையில் உள்ளது. திரும்பி வர விரும்பும் இலங்கை மாணவர்கள் மற்றும் சீனாவில் உள்ள ஏனைய இலங்கையர்களுக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் 50% விலைக்கழிவினை வழங்குவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எயார் சீனா மற்றும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் ஆகியவை முறையே 45% மற்றும் 50% விலைக்கழிவினை வழங்கியுள்ளன. தகவல் மற்றும் வெகுஜன ஊடகங்கள், உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன, வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதம அரச கொரடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6666,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14098,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3781,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2781,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: இலங்கையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் திருப்தி
இலங்கையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் திருப்தி
https://1.bp.blogspot.com/-VhCAFcj41Sw/XjFMdeuIfyI/AAAAAAABaUg/JZMLSd1TjasOiUD-DeAv8DGzLtf2MdtJwCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-VhCAFcj41Sw/XjFMdeuIfyI/AAAAAAABaUg/JZMLSd1TjasOiUD-DeAv8DGzLtf2MdtJwCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/01/mahinda_29.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/01/mahinda_29.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy