haiiii

அரசியல் பிரபலங்களின் பொங்கல் வாழ்த்து செய்திகள் ஒரே பார்வையில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒளியினால் இருள் விலகுவதை போல ஒற்றுமையில் வேற்றுமை விலக பொங்கல் திருநாள் காரணமாய் அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன்.

விவசாயத்தை தமது வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

தைப்பொங்கல் கொண்டாட்டங்களினால் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய பிணைப்புக்கள் குடும்ப அலகுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவடைந்து செல்கின்றன. 

இதனூடாக பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர்கள் மாணவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையிலும் ஆட்சியாளர்கள் தொண்டர்களுக்கிடையிலான மனித நேயமிக்க சமூக பிணைப்புக்கள் மென்மேலும் பலமடையும் என்பது எனது நம்பிக்கையாகும்.

தைப்பொங்கல் தின வழிபாட்டுக்குரிய சூரிய பகவான் நமது வாழ்விற்கு சக்தியையும் இருளை அகற்றும் ஒளியையும் கொண்டு வருவதை போன்று உன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச பகிர்ந்துள்ளார்.

இன்றைய தினம் உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது டுவிட்ட தளத்தில் பிரதமர் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். அதில்,உங்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். எமது தேசம் சகல வளங்களும் கொண்டதாகும்.

எமது தேசத்தில் முன்னேற்றம், அபிவிருத்தி என எல்லாவற்றிலும் அனைத்து மக்களும் ஒன்றாக முயற்சி செய்தால் அனைவரும் நன்மை அடையலாம்.

தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் மற்றும் சௌபாக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பொங்கல் வாழ்த்துச் செய்தியை மக்களுக்கு தெரிவித்துளளார்.

குளிரும் இருளும் மிகுந்த மார்கழி மாதத்துக்குப் பின்னர், புதிய முயற்சிகளைத் தொடங்கும் மங்கலம் மிகுந்த மாதமாக தை அமைகிறது.

´தை பிறந்தால் வழி பிறக்கும்´ என்று மக்கள் நம்புகின்றார்கள். பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக அமைவது.

விளைந்த நெல் வீட்டுக்குக் கொண்டுவந்து களஞ்சியப்படுத்தப்படும். புது நெல் பொங்கலுக்கு தயாராகிவிடும். தை மாதத்தில் இப்பொங்கல் நடைபெறுவதால் ´தைப்பொங்கல்´ எனப்படுகின்றது.

தைப்பொங்கல் தமிழ் சமூகத்தின் பண்பாடு, நாகரிகத்தின் உயர் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். அது எங்களுக்கு ஏராளமான அறுவடையைத் தருதற்குத் துணைசெய்த சூரியனுக்கு நன்றி சொல்லுகின்ற புனிதமான நாளாகும்.

பயிர்ச்செய்கைச் சமூகம் பண்டைக்காலம் தொட்டே சூரியன்மேல் ஆழ்ந்த பக்தி உடையவர்களாயுள்ளனர். நல்ல விளைவினை ஒவ்வோராண்டும் தந்துதவும் சூரியனுக்கு புதிர் எடுத்துப் பொங்கல் செய்வதனுடாக இந்த மரபு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த நல்ல விளைச்சலுக்கு பங்களிக்கின்ற விலங்குகளும் இத் தைப்பொங்கல் நாளிலே நினைவுகூரப்படுகின்றன. இம்மரபுகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள நெருங்கிய பிணைப்பினை பொருளுள்ள முறையிலே வலுப்படுத்துகிறது.

மரபுநிலையில், தைப்பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. தைப்பொங்கல் நாளின் முதல்நாள் தூய்மைப்படுத்தும் நாளாகும். பழையவற்றைப் புதியவை ஈடுசெய்கின்றன. வீட்டிலும் வீட்டைச் சுற்றியுமுள்ள தேவையற்ற பழைய பொருட்கள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. பழைய பாத்திரங்கள் கிரியைமுறைப்படி உடைக்கப்படுகின்றன. புதியவை பெறப்படுகின்றன. பிளாஸ்ரிக், அலுமினியம் முதலியவை பயன்பாட்டில் பெருமளவு ஆகியவுடன் இது ஒரு குறியீட்டு மரபாகவே வந்துவிட்டது.

பொங்கல் நாளன்று குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பொங்கலை ஆக்கி ஒன்றுகூடி உண்பார்கள். பயிர்ச்செய்கை, பண்ணை ஆகியவற்றிலே நெல், பண்ணைப் பொருட்கள், உரம் ஆகியனவற்றைத் தந்து, உழுதற்கும் பொருட்களை ஏற்றிச் செல்லுதற்கும் உதவும் கால்நடைக்கு மூன்றாவது.

வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்

உழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பல இன, மத, கலாச்சார சமூகத்தைக் கொண்ட இலங்கை நாட்டின் கலாச்சார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே தனது நம்பிக்கை.

இத்தத்தையோர் உன்னதமான பண்டிகையை, உழவர்களின் பூமியான வரலாற்று இராசதானிகள் நான்கினைக் கொண்ட  குருணாகல்  மாவட்டம் உள்ளடங்கலான வடமேல் மாகாண மக்களுடன் கொண்டாடக் கிடைத்தமையே நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

இலங்கையைச் செயல்திறன் மிக்க நாடாக மாற்றியமைக்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எண்ணக்கருவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், எழில்மிகு வடமேல் மாகாணத்தை  உருவாக்குவதற்கு அனைத்து மக்களுடன், நாமும் ஜனாதிபதி  அவர்களுடன் ஒன்றிணைகின்றோம்.

விவசாய நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து, மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்

பூர்வீக தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தை திருநாள் இன்று. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும், பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திரு நாள்.

தமிழர்களும் நமது கலாச்சார பாரம்பரியங்களும் உறவுகளுடன் உணர்வுடன் இணைந்து சங்கமிக்கும் பெருநாள்.

பன்மைத்துவ எமது நாட்டில் நமது நாகரீக பாரம்பரியங்கள் சமத்துவத்துடன் கூடிய நல்லிணக்கத்திற்கு வரமளிக்கின்றது.
நாம் இடும் விதைகளே விருட்சமாகின்றது. பயிரிடும் பலாபலன்களை நாமே அறுவடை செய்தாக வேண்டும்.

நாம் விதைத்த விதையில் இருந்து கிடைத்த அறுவடையில் பொங்கல் பொங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்து சுவைத்து மகிழ்வது போன்று கலை,மொழி,சமய ரீதியாக நாம் அனைவருடனும் இணைந்து சமத்துவத்துடன் கூடிய பற்றுடன் சங்கமிப்போம்.
பொங்கலின் சுவையை எப்படி உணர்கின்றோமோ அவ்வாறே சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் இவ் நாட்டின் சந்ததியினராக இணைந்து ,எமது இலங்கை நாட்டின் சுபீட்சத்திற்காக நற் பண்புகளை ஊடுகடத்துவோம்.

இவ் நாட்டிற்காக வியர்வை சிந்தி உரமாக்கும் விவசாயிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் அனைவரும் நன்றி செலுத்துவதற்குரியவர்களே . உலகளவில் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஏனையோருக்கும் எமது நன்றி தெரிவிக்கும் நாகரீகத்தின் உணர்வினை உணவின் விருந்தாக்குவோம்.

பாதுகாப்பான தேசத்தில் தொலை நோக்கான சிந்தனைகளுடன் செயற்பட்டு நாம் அனைவரும் நல் வழிகளில் பயணிக்க ஒளிமயமான எதிர்காலம் தொடரட்டும்.

வான்மழையை, செங்கதிரை, புத்தாண்டை, ஏர் உழவை, முத்தமிழைப் போற்றுகின்ற பொங்கல் பெருவிழாவில் பொங்கும் இன்பம் எங்கும் தங்குக! எங்கும் பரவுக!

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்

தைப்பொங்கல் தினத்தையொட்டி யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் மேலும், தைப்பொங்கல் தமிழர்களின் பொது நன்நாள். ஆதவனுக்கு நன்றி செலுத்தும் அர்ப்பணிப்புக்கு உரிய நாள்.

இன்றைய காலகட்டத்தில் சமய வேறுபாடற்று பொதுப்பண்டிகையாக உலகிற்கு உணவு தரும் உழவர் திருநாள் என அனைவரும் இந்த நன்நாளை வரவேற்கின்றனர், கொண்டாடுகின்றனர்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பர். தை ஆரம்பத்திலிருந்து நற்காரியங்களை நம்மவர் மேற்கொண்டு வருவது வழமையாய் தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரியமாகும்.

இதனாலே தான் தை மாதத்தின் மகத்துவமும் தைப்பொங்கலின் சிறப்பும் எமக்கு எடுத்துக்ககாட்டாக விளங்குகிறது.

துன்பங்கள் தொலைத்து மக்கள் மத்தியில் இன்பமே விளங்கட்டும். இதுவே எனது இதய பூர்வமான பொங்கல் வாழ்த்தாகும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் கொண்டாடி மகிழும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் எமது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று காலந்தோறும் கொண்டாடி வரும் தைப்பொங்கல் திருநாள் தமிழர் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்றும் ஓர் புனித நாளாகும்.

இயற்கையை வணங்கிய எமது முன்னோர்களின் வரலாற்று பாரம்பரியங்களை ஏற்று எமது மக்கள் சூரியனுக்கு நன்றிசெலுத்தும் ஓர் உன்னத தினம் இது!

தை பிறந்தால் வழி பிறக்கும், வழி பிறந்தால் வாழ்வு சிறக்கும்,..இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்று எமது மக்களின் மனங்கள் தோறும் இன்று வீசத்தொடங்கியிருக்கிறது..

பழையன கழிந்து, புதியன யாவும் புகுந்து தமது வாழ்வு பூத்துக்குலுங்க வேண்டும் என்ற எமது மக்களின் கனவுகள் யாவும் நிறைவேற வேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் படி வெல்லும் என்ற எமது மக்களின் எண்ணங்கள் ஈடேற வேண்டும்.

எந்த இலட்சிய கனவுகளுக்காக எமது மக்கள் இத்தனை பேரவலங்களை சந்தித்தார்களோ அந்த இலட்சிய கனவுகள் யாவும் இனி ஈடடேற வேண்டும்!

உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால், சூட்சுமத்தை மாற்றுங்கள், இலட்சியத்தை அல்ல என்ற தர்ம உபதேசங்கள் போல்,

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே என்று கூறும் ஆன்மீக சிந்தனைகள் போல், எமது மதி நுட்ப சிந்தனையின் வழி நின்று நாம் மகத்தான அரசியல் வெற்றிகளை படைப்போம்!… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ இலட்சிய சிந்தனை வழியில், பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் சகல மக்களுக்கும் சமனான பொது மகிழ்வையும் புது வாழ்வையும் தரட்டும்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையோடு கொண்டாடி மகிழும் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் நிகழ மக்களின் பங்களிப்போடு உழைப்போம் என்றும் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு  சம்பந்தன்

புரையாடிபோயுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், சமத்துவமும் மற்றும் நீதி ஆகியவற்றை கண்டடைய மலர்ந்துள்ள தைத் திருநாளில் வழி ஏற்படட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தை திருநாளை முன்னிட்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அதிக விளைச்சலையும், செழிப்பையும் தந்து தமிழர்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உழவர் திருநாளாம் தை திருநாளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் நீங்கி அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,7,அரசியல்,5543,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11612,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3381,விளையாட்டு,745,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2143,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,
ltr
item
Vanni Express News: அரசியல் பிரபலங்களின் பொங்கல் வாழ்த்து செய்திகள் ஒரே பார்வையில்
அரசியல் பிரபலங்களின் பொங்கல் வாழ்த்து செய்திகள் ஒரே பார்வையில்
https://1.bp.blogspot.com/-LaVmHIawJgc/Xh73WhjJPcI/AAAAAAABZ3g/9aS7vhnYGuY53YycufcBmloF4NxapN_AQCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-LaVmHIawJgc/Xh73WhjJPcI/AAAAAAABZ3g/9aS7vhnYGuY53YycufcBmloF4NxapN_AQCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/01/pongalwish.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/01/pongalwish.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy