haiiii

ராஜித சேனாரத்னவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (14) மதியம் 12 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வெளியேறிய நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமைக்காக ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய கடந்த 24 ஆம் திகதி குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அதற்கான அனுமதியை வழங்குமாறு கோரியிருந்தனர்.

அந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்தது.

இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி ராஜித்த சேனாரத்ன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சை பெற்ற வந்த அவரை கடந்த 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 அளவில் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் ராஜித சேனாரத்னவிற்கு பிணை வழங்கினால் அது அவர் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதனால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு அவர்கள் நீதிமன்றத்தை கோரினர்.

அதற்கமைய அவரை கடந்த 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி சலனி பெரேரா உத்தரவிட்டார்.

இதேவேளை கடந்த 28 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியர்கள், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பரிசோதித்தனர்.

அதற்கமைய அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடியும் என அவர்கள் பரிந்துரைத்தனர்.

எனினும் கடந்த 29 ஆம் திகதி மாலை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலை பாதிப்படைந்தது.

இதனால் அவர் குறித்த தனியார் வைத்தியசாலையின் அதிசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல தனியார் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த நோய்காவு வண்டியும் அவர் இல்லாமல் சென்றது.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,7,அரசியல்,5543,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11612,கட்டுரைகள்,1427,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3381,விளையாட்டு,745,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2143,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,
ltr
item
Vanni Express News: ராஜித சேனாரத்னவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்
ராஜித சேனாரத்னவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்
https://1.bp.blogspot.com/-CGVwqapq3qM/Xh2awTmyHyI/AAAAAAABZ14/tUMn_jlEYcMRQSVBkpt80hz1jB_Aji3YQCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-CGVwqapq3qM/Xh2awTmyHyI/AAAAAAABZ14/tUMn_jlEYcMRQSVBkpt80hz1jB_Aji3YQCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/01/rajitha_14.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/01/rajitha_14.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy