haiiii

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த சேகு ரபீக் ( வயது 59) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த மீனவர் கடந்த வியாழக்கிழமை (23) காலையில் தனது மகனோடு, வழமைபோல மீன் பிடித் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில், புத்தளம் கடலில் தவறுதலாக வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக ௯றப்படுகிறது.

காலை 7 மணியளவில் வழமைப் போன்று கடலில் வலை விரிப்பதற்காக சென்ற மீனவர் ரபீக், தனது இயந்திர படகின் தளத்தில் அமர்ந்து சென்ற வேளையில் அந்த சமயம் எழுந்த பாரிய அலையொன்றினால் நிலைத்தடுமாறி அவர் கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.

தனது தந்தை கடலுக்கு வீழ்ந்ததை அடுத்து அவரோடு சென்ற மகன் உடனடியாக தந்தையை காப்பாற்றுவதர்காக அவரும் கடலில் குதித்துள்ளார்.

இந்த சமயத்தில் அவர்களின் இயந்திர படகின் விசிறிகள் அவருக்கு காயத்தை ஏற்படுத்தியதுடன், அப்படகு தானாகவே இயங்கி அந்த இடத்தில் இருந்து தூரமாகிச் சென்றுள்ளது.

இதனால் தனது தந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் மீனவர் ரபீக்கின் மகன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீந்திச் சென்று புத்தளம் கடல் நீர் ஏரியின் அண்டைய பகுதியான மாம்பூரி மீன்பிடிக் கிராமத்தை அடைந்து நடந்த சம்பவங்களை தமது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த மீனவரைத் தேடி அன்றைய தினம் புத்தளத்திலிருந்து 35 படகுகளில் மீனவர்களும், பொதுமக்களும் இணைந்து வரை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், காணாமல் போன குறித்த மீனவரைத் தேடி புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், கடற்படையின் நீர் மூழ்கிப் படையணியினர் கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும், குறித்த மீனவர் காணாமல் போய் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் , கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,18,video,7,அரசியல்,5681,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11775,கட்டுரைகள்,1440,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3427,விளையாட்டு,751,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2225,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,
ltr
item
Vanni Express News: புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு
புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு
https://1.bp.blogspot.com/-C3-gTsDuoWo/Xix6kVb6GJI/AAAAAAABaL8/94QxZPfXiOgkyvJuLMTLZ29uMi7KYNzFQCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-C3-gTsDuoWo/Xix6kVb6GJI/AAAAAAABaL8/94QxZPfXiOgkyvJuLMTLZ29uMi7KYNzFQCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/01/sad_16.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/01/sad_16.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy