haiiii

இலங்கை முஸ்லிம்கள் சிந்திய கண்ணீர்த் துளிகள் - கட்டாயம் Share பண்ணுங்கள்

 - கிண்ணியா ஐனுதீன்.

இன்று இலங்கையிலே பேரினவாத சக்திகள் ஒன்றிணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக படுமோசமான செயல்களில் ஈடுபடுவதை தினம் தினம் நாம் காணக்கூடியதாக உள்ளது. எமது தொழில், சமய கலாச்சாரம், இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய கல்வி, இஸ்லாமிய உடை  என அனைத்து உரிமைகளிலும் கை வைத்து முஸ்லிம்களை இனவாதிகளாக காட்டி  மக்களைத் திசை திருப்பும் சக்திகளின் நோக்கம் அரசியல் மட்டுமே! 

ஆனால், இந்த நாட்டுக்காக இலங்கையில் சிங்கள மக்களுடன் இணைந்து எமது முஸ்லிம் சமூகம் செய்த உயிர்த் தியாகங்களை இருட்டடிப்புச் செய்து இனவாத சக்திகள் அப்பாவிகளான தமிழ் சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் அடிப்படை வாதிகள் பயங்கரவாதிகள் என பொய்யான பிரச்சாரங்களை பரப்பி எம்மை ஏனைய சமூக மக்கள்களிடமிருந்து தனிமைப் படுத்துகிறார்கள். அதனால் முஸ்லிம் மக்கள் செய்த தியாகங்களை இக்கால மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது எமது தலையான கடமைகளாகும். 

அதாவது, கண்டியை ஆட்சி செய்த 2ஆம் ராஜ சிங்க மன்னன் ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்த போது தன்னைப் பாதுகாக்க ஓடிய நேரம்  ஒரு இடத்தில் மாட்டுத் தொழுவம் இருந்தது அதில் ஒரு முஸ்லிம் பெண்மணி வேலை செய்து கொண்டு இருந்தாள் ராஜா அந்தப் பெண் பார்க்க அருகில் இருந்த மரப் பொந்தில் ஒழிந்து கொண்டார். அவரைத் தேடி வந்த வெள்ளைக் காரன் அந்த பெண் இடம் ராஜாவைக் கண்டீரா? எனக் கேட்டார் அந்தப் முஸ்லிம் பெண்மணி ராஜாவைக் காட்டிக் கொடுக்க மறுத்த போது அவரைக் கொலை செய்தார்கள் ஆங்கிலேயர்கள். ராஜா ஆங்கிலேயர்கள் போனதும் வெளியே வந்து பார்த்தார். தன்னைப் பாதுகாக்க முஸ்லிம் பெண்மணி உயிர்த் தியாகம் செய்ததை நினைத்து உருகிப்போனார். அரச காலத்திலேயே சிங்கள மன்னனைக் காட்டிக் கொடுக்காமல் தன் உயிரைக் கொடுத்து பாதுகாத்தவர்கள் முஸ்லிம்கள்.

அதேபோல், இன்று இலங்கையில் பொலிஸ் தினம் கொண்டாடப் படுவதும் ஒரு முஸ்லிம் பொலிஸ் காரனின் உயிர்த் தியாகமே! அதாவது, 1864/03/21 ஆம் திகதி நடந்த ஒரு சண்டையில் பொலிஸ் சீருடையுடன் மாவனல்லையைச் சேர்ந்த சபான் என்ற முஸ்லிம்தான் இலங்கையில் முதல் முதலில் போலீஸ் யூனிஃபார்முடன் உயிர்த் தியாகம் செய்தவர் அவரின் நினைவு கூறல்தான் வருடம் தோறும் நடைபெறும் பொலிஸ் தினம்

இதேபோல், இராணுவ  கேனல் துவான் முத்தலிப் என்பவர் புலிகளின் ஆரம்ப கால சண்டையில் தன் உயிரைக் கொடுத்து பல இராணுவ வீரர்களை பாதுகாத்த தியாகி . கேனல் லாபீர் என்பவர் தரைப்படையில் அதி விசேட அணியை உருவாக்கி வெற்றி பெற்று  பயங்கரவாதிகளின் தாக்குதலால் நாட்டுக்கு உயிர்த் தியாகம் செய்து மரணித்த ஒரு இலங்கை இராணுவ வீரன். . இப்படியான காலப் பகுதியில் அதிகமான முஸ்லிம் வீரர்கள் தங்களது உயிரைக் கொடுத்து இந்த மண்ணைப் பாதுகாத்தார்கள் என்பதை நாம் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இதேவேளை, முஸ்லிம் பொது மக்கள் அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு உதவி செய்து துணை நின்ற ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொது மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கான சொத்துக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டும் அகதிகளாக வாழ்ந்து இன்றும் சொந்த ஊர்களில் வாழ முடியாத வாறு அலைக்கழிப்பு செய்யப்படுகின்றதை இந்த இனவாதம் பேசும் மக்கள் மறந்து விடக் கூடாது.

மேலும், 1989/11/17 ஆம் திகதி சம்மாந்துறையில் 42 முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளை நிராயுதபாணிகளாக்கி புலிகள் கொலை செய்தார்கள். இவர்களை இழந்த குடும்பம் இன்றும் சம்மாந்துறையில் கண்ணீர் சிந்தி வேதனைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு வாழுகிறார்கள். 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 40 முஸ்லிம் தனவந்தர்களை புலிகள் கடத்தினார்கள் யாழ்ப்பாணத்தில் . அதில் 17 பேர்களிடம் கப்பம் வாங்கிய பிறகு விடுவித்த புலிகள் மீதியான முஸ்லிம் முதலாளிகளுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரையிலும் தெரியாது அவர்கள் குடும்பம் கண்ணீரில் வாடுகிறது. 

இதேபோல், மனித குலம் வெட்க்கப்பட்டு தலை குனிந்த வரலாறு 1990 ஆம் ஆண்டு எண்ணிப்பார்க்க முடியாத கண்ணீர்க் காவியம் உடுத்த உடையோடு கையில் ஒரு சதம் கொடுக்காமல் அவர்களின் நகை பணம் வீடு வாசல் சட்டி பானை ஆடு மாடு கோழி வீட்டுக்குள் இருந்த அத்தனை பொருட்களையும் பறித்துக் கொண்டு உடுத்த உடையுடன் உயிரை மட்டுமே உடலில் வைத்து ஆண்களும் பெண்களும் வயோதிபர்களும் சிறுவர்கள்  குழந்தைகள்  கர்பிணிகளும் என யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அனைத்து முஸ்லிம் மக்கள்களையும் சில மணி நேரங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார்கள் . பசியோடும் தாகத்தோடும் நடையாக நடந்து வந்து சேர்ந்த வரலாற்றை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியுமா?  இதேபோல் எந்த சிங்கள தமிழ் மக்களும் வெளியேற்றப்பட கண்ணீர் சரித்திரம் இலங்கையில் உண்டா?. கிட்டத்தட்ட 150 அகதி முகாம்களில் நாடுமுழுவதும் அவர்கள் வாழ்ந்து இன்றும் கூட அவர்களின் சொந்த ஊர்களில் குடி ஏற முடியாது சிலர் தடுக்கப்படுவதை எம்மால் மறக்க முடியாது.

இதேபோல், கிழக்கில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுது கொண்டு இருந்த சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் 140 முஸ்லிம்களைக் கதறக் கதற சுட்டுக் கொன்று குவித்த கறைபடிந்த வரலாறு இன்றும் காத்தான்குடியில் கண்ணீர் சிந்துகிறது. இந்த குற்றத்தை செய்த கருணா படையினரை யுத்தக் குற்ற விசாரணை வருமாக இருந்தால் இவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் யுத்தக் குற்றங்களை விசாரணை செய்யும் குழுவே சொல்லியுள்ளது. அவ்வளவு அட்டூழியங்கள் முஸ்லிம் மக்களுக்கு செய்தும் மக்கள் அரசாங்கத்தோடுதான் ஒத்துப் போனார்கள்.

இன்னும், கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர் என்று ஏராளமான முஸ்லிம் ஊர்களில் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் கடைகள் எல்லாம் சூறையாடி தீ இட்டுக் கொளுத்தி நூற்றுக் கணக்கான மக்களை படுகொலையும் செய்தார்கள். ஏறாவூர் பிஞ்சு நகர் தாக்குதல் 118 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். 1990 அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் ஒரோ இடத்தில் கொலை செய்தார்கள்.  அதேபோல் 1990/08/05 ஆம் திகதி அம்பாறையில் வயலுக்கு போன 17 முஸ்லிம்களை புலிகள் கொன்று குவித்தார்கள். கிண்ணியா மூதூர் பகுதிகளில் வயதுக்குப் போன 50 க்கு மேல்ப்பட்ட முஸ்லிம் இன்று கூட என்ன நடந்தது என்று தெரியவில்லை. கடலுக்கு போன மீனவர்கள், மாட்டுப் பட்டிக்குப் போன பண்ணையாளர்கள் என ஏராளமான முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்தது 30 வருடம் நடைபெற்ற உள் நாட்டு யுத்தம்..   இதனால் இலங்கை நாடு முழுவதும் முஸ்லிம்கள் உடமைகள் உயிரை மற்றும் இழந்து வாழவில்லை  நிம்மதியையும் இழந்து வாழ்ந்தார்கள்.

இவைகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக நீங்கள் பார்க்க வேண்டுமானால், அந்தக் காலத்தில் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்களின் பதிவுகளைப் பார்க்கலாம். அதில் எந்த எந்த காலங்களில் எங்கே? எங்கே? முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் பேசி இருப்பார் அஷ்ரப் அவர்கள்.

ஆக, இவைகள் எதற்காக நடந்தது தெரியுமா முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களோடும் அரசாங்கத்தோடும் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்த நாட்டை பாதுகாக்க உதவினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் இவ்வளவு இன்னல்களையும் சுமந்தார்கள். 

ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக இருந்தார்களே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செயல்படவுமில்லை. 1990 களிலும் அதுக்கு பின்னரும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக தமிழ் மக்கள் இடம் பெயர்ந்த போது தமிழ் மக்களுக்கு தனது வீட்டையும் கொடுத்து வாழ வைத்தவர்கள் முஸ்லிம்கள். இதில் ஒரு உண்மையான விடயம் யாதெனில், பொது மக்களாகிய தமிழ், சிங்கள , கிறித்தவ மற்றும் முஸ்லிம் மக்களிடம் எந்த விதமான பகை எண்ணமும் இல்லை. அரசியல் இலாபம் கருதி இவர்களின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் மோதவிட்டு அதில் அரசியல் இலாபம் காணுகிறார்கள். இதை இன்றைய சமூகம் நங்கு உணர்ந்து செயல் பட்டால் ஆசியாவின் முத்து இலங்கை என்ற பெயரைப் பெற்று செழிப்புடன் நிகழலாம்.

நன்றி,
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12167,கட்டுரைகள்,1456,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3548,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2440,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,
ltr
item
Vanni Express News: இலங்கை முஸ்லிம்கள் சிந்திய கண்ணீர்த் துளிகள் - கட்டாயம் Share பண்ணுங்கள்
இலங்கை முஸ்லிம்கள் சிந்திய கண்ணீர்த் துளிகள் - கட்டாயம் Share பண்ணுங்கள்
https://1.bp.blogspot.com/-xjAxyUNfd44/XkBOIF7sYyI/AAAAAAABavo/Xm4FsLuxxywGy5c7MwNRgulSaIAltNJjACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-xjAxyUNfd44/XkBOIF7sYyI/AAAAAAABavo/Xm4FsLuxxywGy5c7MwNRgulSaIAltNJjACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/02/article_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/02/article_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy