haiiii

சலூன்களில் தலை முடியைக் கத்தரிக்கலாம் - ஆனால் மீசை, தாடியை சவரம் செய்யத் தடை

- எம்.எப்.எம்.பஸீர்

சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்களை மீளத் திறப்பதற்கான சுகாதார அமைச்சின் நிபந்தனைகள் அடங்கிய ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை திறக்க அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கான சாத்தியங்களை குறைக்கும் விதமான பரிந்துரைகளையும் அது சார்ந்த நிபந்தனைகளையும் முன்வைத்து, அவற்றை திறப்பதற்கான அனுமதியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள, சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்களை திறப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய பரிந்துரைகளின் பிரகாரம்,

‘திறக்கப்படும் அழகுக்கலை நிலையங்களில் தலை முடி வெட்டுதல், தலை முடியை குறைத்தல், தலை முடிக்கு வர்ணம் சேர்த்தல், கை, கால் நகங்களுக்கு நிறப்பூச்சிடல், கை கால்களில் தேவையற்ற மயிர்களைக் கலைதல் ஆகிய சேவைகளை மட்டுமே வழங்க முடியும்.

சிகை அலங்கார நிலையங்களில், தலை முடி வெட்டும் நடவடிக்கை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். மீசை, தாடி ஆகியவற்றை சவரம் செய்வது பூரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட, சேவை வழங்குனரும், சேவை பெறுநரும் ஒன்றாகப் பழகும் காலம் மிகக் குறுகியதாக இருக்க வேண்டும் எனவும், ஒருவருக்கு பயன்படுத்தும் துணி உள்ளிட்டவை மற்றைய சேவை பெறுநர் தொடர்பில் பயன்படுத்த முடியாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அழகுக் கலை நிலையங்களில் சேவை வழங்கும்போது, உதடுகளை ஸ்பரிசம் செய்யக் கூடாது. சேவை வழங்கும் அனைவரும் என் 95 ரக முகக் கவசங்களை அணிய வேண்டும்.

சேவை வழங்கும் இடங்களில் சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொலைகாட்சி ( ரிமோர்ட்) போன்றவற்றை வைக்கக் கூடாது என்பதுடன், சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நியங்களின் கதவுகளை திறப்பதற்கு என தனியான சேவையாளர் ஒருவர் சேவையில் ஈடுபடுத்தல் வேண்டும்.

அனைத்து சிகையலங்கார , அழகுக் கலை நிலையங்களும் ஆரம்பிக்க முன்னரும், சேவைகள் முடிவடைந்த பின்னரும் முற்றாகத் தொற்று நீக்கல் செய்யப்படல் வேண்டும். கழிவுகளை பையொன்றில் சேகரித்து அழித்தல் வேண்டும். சேவை நிலையத்துக்கு முன்பாக கைகளை கழுவ தேவையான வசதிகள் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

சேவை நிலையத்தில் பணியாற்றும் அனைவர் குறித்த தகவல்களும் உரிமையாளரிடம் இருத்தல் வேண்டும். அத்துடன் நோய் , அங்கவீனம் உள்ள சேவையாளர்கள் சேவையில் ஈடுபத்தல் கூடாது. சேவையாற்றுபவர்களின் உடல் உஷ்ணத்தை நாளாந்தம் பரீட்சித்தல் வேண்டும்.

எவ்வாறாயினும் சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்கள் திறக்கப்பட முன்னர் மாகாண சுகாதார வைத்திய அதிகாரியிடம் திறப்பதற்கு அனுமதி கோரும் விண்ணப்பம் முன்வைக்கப்படல் வேண்டும். அதனை பரீட்சித்து, முன்னாயத்தங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் மட்டும், திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13089,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3624,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2680,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,
ltr
item
Vanni Express News: சலூன்களில் தலை முடியைக் கத்தரிக்கலாம் - ஆனால் மீசை, தாடியை சவரம் செய்யத் தடை
சலூன்களில் தலை முடியைக் கத்தரிக்கலாம் - ஆனால் மீசை, தாடியை சவரம் செய்யத் தடை
https://1.bp.blogspot.com/-yonHp-GGPxM/XrQSqUsMpEI/AAAAAAABfgA/kHpytabwkEkFNdSUfO68Csz0P4ktNygVgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-yonHp-GGPxM/XrQSqUsMpEI/AAAAAAABfgA/kHpytabwkEkFNdSUfO68Csz0P4ktNygVgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/05/anil_7.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/05/anil_7.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy