haiiii

ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது

- சந்திரன் குமணன்

ஊரடங்கு தளர்த்தப்படுவது    பரீட்சார்த்த முயற்சியாகத்தான்   ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட  கொரோனா வைரஸ் தொடர்பில்   ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல்  இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கொவிட் 19 தொற்று நிலை காரணத்தினால் அண்ணளவாக இரண்டு மாதகால இரண்டு மாதங்கள் இலங்கை முடக்கப்பட்டு அரசு இயந்திரம் மெதுவாக்கப்பட்டு மக்களின்  வாழ்க்கை முறையில் தடங்கல்கள் ஏற்பட்டு இருந்த நிலை மாறி நாளை ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டு மக்கள் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு காலடி எடுத்து வைக்கும் முதலாவது விடயம் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

என்னைப் பொறுத்தளவில் கிடைக்கின்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொவிட் 19 தொற்று  நிலை ஓரளவு கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அரசாங்கமும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு  அமைவாக தான் முதலாவது நடவடிக்கையை தொடங்குகிறது.

இருந்தாலும் கொவிட் 19 அச்சுறுத்தல் இலங்கையில் முற்று முழுதாக  நீங்கிவிடவில்லை நாளொரு வண்ணம் ஆக நோயாளிகள் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த அடிப்படையில்தான் நாங்கள் நாளைய நிகழ்வுகளை அதாவது இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில் நாங்கள் எந்த விதமாக காரியம் ஆற்ற முடியும் என்ற நடவடிக்கைகளை இந்த விதமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிகளை பற்றி நாங்கள் மிகவும் அழுத்தமாக வேண்டிய சூழலில்  இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் நாளை போக்குவரத்துக்கள் அதாவது பொது போக்குவரத்துகள் தனியார் போக்குவரத்துக்கள்  ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த போக்குவரத்துக்கள் எல்லாம் பொதுமக்களுக்கான தனிப்பட்ட விடயங்களை கொண்டு செல்வதற்கான அல்லது உறவினர்களை பார்ப்பதற்காகஇ பொருட்களை வாங்க செல்வதற்கானஇ போக்குவரத்து நடைமுறைகளாக  இருக்க போவது இல்லை.  

இது பொது உத்தியோகத்தர்களுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கான அல்லது பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய கடமைகளை ஆற்றுவதற்கு வருவதாகத்தான் நடைமுறைப்படுத்த இருக்கின்றது. 

அதுவும் அந்த போக்குவரத்து குறித்து விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன ஒரு பஸ் வண்டியில் 50 ஆசனங்களில் 25 நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள் அவர்கள் சமூக இடைவெளியான  ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு ஆசனத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் தான் அந்த போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

பொது நிருவாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது அத்துடன் தனியார் நிறுவனங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடைகள் சந்தைகள் சலூன் கடை திறக்கப்பட உள்ளது.

இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகத்தான்  இவை  நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13043,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3622,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,
ltr
item
Vanni Express News: ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது
ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது
https://1.bp.blogspot.com/-HTPdhZCUJg4/XrfqmWGlVLI/AAAAAAABfp0/HFkXkKMh68U81-iaGC5WUXx-ZznsP957gCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-HTPdhZCUJg4/XrfqmWGlVLI/AAAAAAABfp0/HFkXkKMh68U81-iaGC5WUXx-ZznsP957gCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/05/dr.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/05/dr.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy