haiiii

5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை - சுகாதார அமைச்சர்

- க.கிஷாந்தன்

பெருந்தோட்டத்  தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இன்று (12.05.2020) நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் அவர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுநர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், மாவட்டத்துக்கு பொறுப்பான வைத்திய, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பொது சுகாதார வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதனையார்கள் உட்பட மேலும் பல அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் சுகாதார அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர். அதற்காக தேவைப்பாடும் உதவிகளையும் குறிப்பிட்டனர்.

அத்துடன், மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைத்தடுத்து மக்களையும், நுவரெலியா மாவட்டத்தையும், மாகாணத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன், அதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

சுமார் இரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுகாதார விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தாலும் இறுதியில் சமுர்த்தி கொடுப்பனவு பற்றியும், மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாலின் போது கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர்,

" தோட்டத் தொழிலாளர்கள் 5 ஆயிரம்  ரூபாவுக்கு குறைவான சம்பளம் பெறும் பட்சத்தில்,  குறைவான தொகையை ஈடுசெய்யும் வகையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வகையிலேயே சுற்று நிரூபத்தில் ஏற்பாடு உள்ளது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி, ஏதேனும் தவறு இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் மீண்டும் அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். " - என்றார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13102,கட்டுரைகள்,1465,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3627,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2680,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,
ltr
item
Vanni Express News: 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை - சுகாதார அமைச்சர்
5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை - சுகாதார அமைச்சர்
https://1.bp.blogspot.com/-urADwtkYpDA/Xrp-By7U2uI/AAAAAAABfyM/MjqICDf5DvMNtKKAJsnpQc-4HrYh_NdYgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-urADwtkYpDA/Xrp-By7U2uI/AAAAAAABfyM/MjqICDf5DvMNtKKAJsnpQc-4HrYh_NdYgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/05/pavithra_12.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/05/pavithra_12.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy