haiiii

வன்னியில் சிரமமின்றிய வெற்றியில் வெளிப்படும் ரிஷாட்டின் ஆளுமையும் வெற்றிக்கு சாதகமாகும் களமும்

- துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.

பரந்து விரிந்த ஆல மரத்தின் கீழ் சிறிய செடிகள் வளராது. மறைந்த தலைவர் அஷ்ரபின் ஆளுமையின் முன், அவருக்கு முன்னிருந்த பலமான அரசியல் வாதிகளே அழிந்தனர். ஒரு ஆளுமையை உலகம் ஏற்பதற்கு முன்பு, அவர் வாழும் பகுதியினர் அவரை ஏற்க வேண்டும். அதுவே அவருக்குள்ள மிகப் பெரிய பலம். அ.இ.ம.காவின் தலைவர் றிஷாடை பொறுத்த வரையில் இம் முறை வன்னியில் சிரமமின்றிய பெரு வெற்றியினை பெறுவார். இவ் வெற்றியை ஆராய்வது அவரது ஆளுமையை அறிந்து கொள்ள போதுமானதாகும்.

வன்னி மாவட்டம் மொத்தம் 5 ஆசனங்களை கொண்டது. வன்னி தமிழ் மக்களை அதிகம் கொண்ட ஒரு மாவட்டம். போனஸ் உட்பட முதல் மூன்று உறுப்பினர்களும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவாதற்கான வாய்ப்பே உள்ளது. வன்னியின் நான்காவது ஆசனத்திலேயே முஸ்லிம் ஒருவர் தெரிவாக முடியும். அந்த நான்காவது ஆசனத்தில் அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத்தின் பெயர் எழுதியிருக்கும். இதுவே அவருடைய ஆளுமை. அவர் தாராபுரமெனும் சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், பிரதேச வாதங்களை மீறிய ஆதரவைப் பெற்றுள்ளார். இது அவ்வாளவ இலகுவானதொன்றல்ல. இதுவே ஆளுமையின் வெளிப்பாடு.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மு.கா தலைவர் ஹக்கீமை விட மு.அமைச்சர் ஹலீம் பத்தாயிரம் வாக்கை அதிகமாக பெற்றிருந்தார். ஹலீமின் வாக்கில் ஹக்கீம் நனைந்துள்ளார் என்பதே இது கூறும் செய்தி. ஹக்கீம் தெரிவானால் ஹலீமை விட முக்கிய அமைச்சுக்கள் வழங்கப்படும் என தெரிந்தும், அம் மக்கள் ஹக்கீமை விட ஹலீமையே கூடுதலாக ஆதரித்திருந்தனர். இது தான் மு.காவின் தலைவர் ஹக்கீமின் ஆளுமை. அதுவே அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதின் ஆளுமை.

இம் முறை வன்னியில் அ.இ.ம.காவும் மு.காவும் டெலிபோன் சின்னத்தில் தேர்தல் களம் கண்டுள்ளது. இம் முறை டெலிபோன் அணிக்கு இரு ஆசனம் கிடைக்கக் கூடிய வாய்ப்புமுள்ளது. அதில் முதலாவது ஆசனத்தில் அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதின் பெயரிருக்கும். ஏனையவர்கள் ஆகக் கூடியது அவருடைய வாக்கின் கால் பகுதியளவே பெற முடியும். இம் முறை வன்னியில் மிக இலகுவான வெற்றியை அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பெறுவார். அவர் வன்னியில் வெற்றிபெற பாரிய முயற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை. 

மயிலின் வன்னி களம் மிக இலகுவாக இருப்பதால், அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பெருந் தலையிடியின்றி ஏனைய பிரதேச பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதின் பேச்சுக்கென்று முஸ்லிம்களிடையே தனி இடமுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் முறை கண்டியில் மு.காவின் தலைவர் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. வன்னியில் மயிலின் வெற்றி இலகுவாக இருப்பது மயிலின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இம் முறை அனைத்தும் மயிலுக்கு சாதகமாகவே உள்ளது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6654,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14082,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: வன்னியில் சிரமமின்றிய வெற்றியில் வெளிப்படும் ரிஷாட்டின் ஆளுமையும் வெற்றிக்கு சாதகமாகும் களமும்
வன்னியில் சிரமமின்றிய வெற்றியில் வெளிப்படும் ரிஷாட்டின் ஆளுமையும் வெற்றிக்கு சாதகமாகும் களமும்
https://1.bp.blogspot.com/-aapjEMXvRiY/XuNvJdEMFPI/AAAAAAABhXM/kWOQu7ccEDk8Wq4dZnTo27uX4f0NJcUfgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-aapjEMXvRiY/XuNvJdEMFPI/AAAAAAABhXM/kWOQu7ccEDk8Wq4dZnTo27uX4f0NJcUfgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/06/article_12.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/06/article_12.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy