இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 473,105 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கொரோனாவால் 418 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,894 ஆக உயா்ந்துள்ளது.
தொற்றுக்கு 186,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 271,697 போ் குணமடைந்தனா்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, கொரோனாவால் மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 142,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 73,792 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 6,739 ஆக உள்ளது. தில்லியில் 70,390 பேரும், தமிழ்நாடு 67,468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் ஜூன் 24 வரை 7,560,782 இலட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207,871 க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.