- கற்பிட்டி செய்தியாளர்கள்
லங்கா சதோசவின் கற்பிட்டி கிளையை மேலும் ஆறு மாத காலத்திற்கு அதே கட்டடத்தில் இயங்குவதற்கு நடவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் வாடகைக்கு இயங்கி வந்த குறித்த சதோசவின் ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ளமையால் மீண்டும் ஒப்பந்த காலத்தை புதுப்பிக்காது கட்டடத்தை ஒப்படைக்குமாறு கற்பிட்டி ப.நோ.கூ சங்க நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கற்பிட்யில் இயங்கி வந்த சதோச நிலையத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
இது கற்பிட்டியில் வாழும் சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியதுடன், கடந்த மூன்றரை வருடங்களாக இயங்கி வந்த சதோசவை மூடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக போராட்டங்களையும் நடத்துவதற்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பிரதேசத்தில் சதோச விற்பனை நிலையமொன்றின் அவசியம் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கற்பிட்டி நகரில் சதோச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி குறித்த சதோச விற்பனை நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த சதோச விற்பனை நிலையம் மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் இரண்டு வருட ஒப்பந்தஅடிப்படையில் வாடகைக்கு இயங்கி வந்தது.
இந்நிலையில், சதோச விற்பனை நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட வாடகை ஒப்பந்த காலம் இம்மாதம் 2020.06.30 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகம் ஒப்பந்த காலத்தை புதுப்பிக்காது சதோச விற்பனை நிலையக் கட்டடத்தை மீளவும் கையளிக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சதோச விற்பனை நிலையத்தின் பிரதான காரியாலயத்திலிருந்து தமக்கு கிடைத்த ஆலோசனைக்கு அமையவே லங்கா சதோசவின் கற்பிட்டி கிளையை வேறு கட்டடத்திற்கு இடமாற்றாது மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சதோச நிலைய உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பதில் தலைவர் எம்.ரி.எம்.ஹன்பியாஸிடம் கேட்டதற்கு, எமது சங்கத்திற்குச் சொந்தமான குறித்த கட்டடத்தை லங்கா சதோச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு மாதாந்த வாடகைக்கு வழங்கப்பட்டது.
எனினும், குறித்த நிலையம் எமக்கு உரிய நேரத்தில் வாடகை பணத்தை வழங்குவதில்லை. இதனாலேயே நாம் சதோச நிலையத்திற்கு வழங்கிய இரண்டு வருட ஒப்பந்த காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதால், அதனை மீண்டும் புதுப்பிக்காமல் கட்டடத்தை ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறோம். தவிர, வேறு எந்த உள்நோக்கங்களும் இல்லை என்றார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர் அமைப்பினர் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சனத் நிசாந்த பெரேராவின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அவர், வரையறுக்கப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துடன் கலந்துரையாடி குறித்த சதோச நிலையத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு அதே கட்டடத்தில் இங்குவதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
ஆத்துடன், குறித்த ஆறு மாத காலத்திற்குள் லங்கா சதோச நிலையத்திற்கு நிரந்தர கட்டடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சனத் நிசாந்த பெரேரா கற்பிட்டி நகரிலிருந்து சதோச நிலையத்தை ஒருபோது மூடுவதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் வாக்குறுதியளித்துள்ளார்.