haiiii

அண்ணன் படகு கொடுத்தாராம் தம்பி வாகனம் கொடுத்தாராம் ? பழிவாங்கல் உச்சம்

- ஊடகப்பிரிவு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும், தனது விளக்கத்தை தெரிவிக்கவும் தனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்றும் ரிப்கான் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், நேற்று காலை (22) முதல், இன்று அதிகாலை ஒரு மணிவரை சாட்சியமளித்த புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், சஹ்ரான் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு, 2018 ஆம் ஆண்டு ரிப்கான் பதியுதீன், மன்னார் துறையில் படகு வழங்கி உதவியதாகச் சாட்சியமளித்தார். இவர் வழங்கிய சாட்சியம் தொடர்பில், இன்று பல ஊடகங்கள் செய்திகளையும் வௌியிட்டுள்ளன.

இது தொடர்பில் அதிர்ச்சியடைந்த ரிப்கான் பதியுதீன், “அரசியல் பழிவாங்கல் காரணமாக இச்சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை முற்றாக நிராகரிக்கின்றேன். இது குறித்து, தனக்கும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை திட்டமிட்டு பழிவாங்கவே, எனது பெயரையும் இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்தியுள்ளனர்.

எனவே, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர் நேற்று வழங்கிய சாட்சிகள் அனைத்தையும் முற்றாக நிராகரிக்கிறேன். இதுபற்றிய அதிருப்தியை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்க எனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் எழுத்துமூலம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,5991,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13381,கட்டுரைகள்,1479,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2705,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: அண்ணன் படகு கொடுத்தாராம் தம்பி வாகனம் கொடுத்தாராம் ? பழிவாங்கல் உச்சம்
அண்ணன் படகு கொடுத்தாராம் தம்பி வாகனம் கொடுத்தாராம் ? பழிவாங்கல் உச்சம்
https://1.bp.blogspot.com/-p61qDttUdCY/XvJNckNrf3I/AAAAAAABh6k/do18X8C9eQkdVvGbPE47v5py__D903IJwCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-p61qDttUdCY/XvJNckNrf3I/AAAAAAABh6k/do18X8C9eQkdVvGbPE47v5py__D903IJwCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/06/rb6.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/06/rb6.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy