haiiii

நான் ஒருபோதும் சண்டித்தன அரசியல் செய்பவன் இல்லை - நேற்று என்ன நடந்தது ? அலிசப்ரி விளக்கம்


- ரஸீன் ரஸ்மின்

நாளுக்கு நாள் எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றமையை தாங்கிக்கொள்ள முடியாதவர் என் மீது அபாண்டங்களை சுமத்துகிறார்கள் என பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரான அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.

புத்தளம் ரத்மல்யாய 100 வீட்டுத்திட்டத்தில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் மீது தாக்குதல் நடத்துவதற்காக வேட்பாளரான அலிசப்ரி தனது அடியாட்களை அனுப்பி வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சும்பவம் இடம்பெற்ற தினம் மாலை அல்காசிமி சிட்டியில் மக்கள் சந்திப்பு ஒன்று இருப்பதாக எனது தேர்தல் பிரச்சார ஒழுங்கமைப்புக் குழுவினரால் நேரம் கொடுக்கப்பட்டது. அதன்படி குறித்த நேரத்தில் நானும் அங்கு சென்ற போதுதான் அது எமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீரின் வீடு அமைந்துள்ள கிராமம் என தெரியவந்தது.

ஊடனடியாக நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளரை அழைத்து இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீருக்கு அழைப்பு விடுத்தீர்களா என்று கேட்டபோது அவர்கள் ஒருசில காரணங்களை சொன்னார்கள். அதற்கு நான் அவர்களை கண்டித்துவிட்டு அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்Nதுன். சுமார் 50 இற்கும் கூடுதலான மக்கள் அங்கு இருந்தனர்.

அப்போது கூட்டம் நடந்த இடத்திற்கு வருகை தந்த பிரதேச சபை உறுப்பினர் என்னை மிகவும் தரக்குறைவாக பேசியதுடன், அங்கிருந்த மக்களையும் விரட்டியடித்தார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது. அதனையடுத்து இன்னுமொரு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடு கூடவே வருகை தந்த மூவர் கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் அதாவது பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீரின் வீட்டிற்கு அருகில்தான் நின்றுகொண்டிருந்தனர். எமது வாகனங்களும் அந்த பகுதியில்தான் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்போது கூட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் தனது வீட்டிற்கு சென்றபோது அவரது வீட்டிற்கு அருகாமையிலிருந்த எனது ஆதரவாளர்களுடனும் முரண்பட்டுள்ளார். ஆந்த முரண்பாடுதான் பின் வாய்த்தர்க்கமாகியுள்ளது.

தவிர, அவரை அடிப்பதற்காக நான் புத்தளத்திலிருந்து ஆட்களை அழைக்கவில்லை. நான் ஒருபோதும் சண்டித்தன அரசியல் செய்பவன் அல்ல. அல்லாஹ்வுக்காக தூய்மையாக அரசியலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த அரசியலை முன்னெடுத்துச் செல்கிறேன்.

அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற தேவை என்கில்லை. மக்களின் நலன்களை முன்நிறுத்தி அந்த மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே நான் இந்த பயணத்தை ஆரம்பித்தேன். எனது இந்த பயணத்தில் உள்ள10ர், இடம்பெயர்ந்த என்ற பேதங்கள் பார்த்தது கிடையாது. 

அவ்வாறு பிரதேசவாதங்களை சொல்லி அரசியல் செய்யப்போவதுமில்லை. புத்தளத்தில் வாழும் அனைவரும் எனது மக்கள் என்ற சிந்தனையுடன்தான் முடியுமான உதவிகளை வங்கிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்திலும் அவ்வாறுதான் செயற்படுவேன்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை என்மீதான மக்களது ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை சகித்துக்கொள்ள முடியாததால்தன் இவ்வாறு என்மீது அபாண்டங்களை சுமத்துகிறார்கள் என்றார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6662,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14090,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3777,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2781,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: நான் ஒருபோதும் சண்டித்தன அரசியல் செய்பவன் இல்லை - நேற்று என்ன நடந்தது ? அலிசப்ரி விளக்கம்
நான் ஒருபோதும் சண்டித்தன அரசியல் செய்பவன் இல்லை - நேற்று என்ன நடந்தது ? அலிசப்ரி விளக்கம்
https://1.bp.blogspot.com/-HoHsh1X7Oz4/Xv2Bnu4Uv5I/AAAAAAABihU/xMJGZd4ppbQQSr4xePrdKKEjvb3K-B-BgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-HoHsh1X7Oz4/Xv2Bnu4Uv5I/AAAAAAABihU/xMJGZd4ppbQQSr4xePrdKKEjvb3K-B-BgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/07/alisabry.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/07/alisabry.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy