haiiii

அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயம் - வி.ஜனகன்

- ஊடகப்பிரிவு

இலங்கையை சர்வதேச ரீதியாக தேயிலை ஊடாக அடையாளப்படுத்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் ஊடாக அடையாளப்படுத்தும் தேசிய கிரிக்கட் வீரர்களையும் இந்த அரசாங்கம் அவமானப்படுத்தி அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி,ஜனகன் குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "கிரிக்கட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கும் கிரிக்கட் சபையில் இருந்தே விசாரணைகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.

அத்துடன், சிறிலங்கா கிரிக்கட் சபையில் பல ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இதற்கு அங்கு பொறுப்பாக இருந்தவர்கள்தான் காரணம் என்று தெரிந்திருந்தும், அவர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டிய விசாரணைகளை நாட்டின் பெருமையாக கருதுகின்ற கிரிக்கட் வீரர்களிடம் இருந்து ஆரம்பித்திருப்பதென்பது துரதிஸ்டவசமான ஒரு விடயம்.

இலங்கையின் பெயரை  உலகளவில் கொண்டுசென்ற பெருமை எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், தேசிய கிரிக்கட் வீரர்களையுமே சாரும்.

இந்த அரசாங்கதத்தின் அங்கத்தவர்களான இரண்டு தரப்பினரையும் , தங்களின் அரசியல் வலைக்குள் சிக்கவைத்து அவர்களின் மீது ஏறி அரசாங்கம் சவாரி செய்கிறது.

1000 ரூபாய் வேதனம் தருகின்றோம் என்று பெருந்தோட்ட மக்களை வைத்து ஒரு பக்கம் அரசியல் நடத்தப்படுகிறது, ஆனால் இதுவரை அந்த 1000 ரூபாய் கிடைப்பதற்கான சாத்தியம் ஏற்படவில்லை. இதுவரை அந்த விடயத்தில் அரசியல் செய்து வந்த அரசாங்கம் சற்று தடம்மாறி கிரிக்கட் விளையாட்டு துறையில்  குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்த கிரிக்கட் விளையாட்டு வீரர்களை வைத்து இப்போது அரசியல் செய்கிறது.

நாட்டு மக்கள்  அனைவரும் பாகுபாடின்றி விரும்பக் கூடிய கிரிக்கட் வீரர்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதானது ஏற்றுக்  கொள்ள முடியாத விடயமாகும்.

எனவே, தற்போது கொவிட் 19 க்கும் பின்னர் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை வழங்கி இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக கலாநிதி வி.ஜனகன் மேலும் குறிப்பிட்டார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14488,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயம் - வி.ஜனகன்
அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயம் - வி.ஜனகன்
https://1.bp.blogspot.com/-7E5L64o3DAA/Xv9rPLo-RRI/AAAAAAABiqQ/bEdVmKZvI7IeSB5s01V6fsj5HVAp4cligCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-7E5L64o3DAA/Xv9rPLo-RRI/AAAAAAABiqQ/bEdVmKZvI7IeSB5s01V6fsj5HVAp4cligCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/07/janakan_3.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/07/janakan_3.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy