haiiii

மக்களின் பிரச்சினைகள் இருந்தால் கூறலாம் - ஆலோசனைகள் இருந்தால் முன்வைக்கலாம் - ஜீவன் தொண்டமான்

- க.கிஷாந்தன்

" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்பம். கொட்டகலை என்பது எமது கோட்டை. எனவே, எந்நேரமும் அங்கே எமது மக்கள்  வரலாம். என்னை சந்திக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகளை இருந்தால் முன்வைக்கலாம். எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுவேன." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தெரிவித்தார்.

கொட்டகலை மேபீல்ட், சாமஸ் தோட்டத்தில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் கூறியதாவது,

" எவ்வித நிபந்தனையும் இன்றியே ஆயிரம் ரூபா அவசியம் என அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் ஆயிரம் ரூபாவை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆயிரம் ரூபா கிடைக்கும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம்.

தனிவீட்டுத்திட்டத்தை கடந்த காலத்தில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலவே முன்னெடுத்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் என்றனர். ஆனால், மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதே எமது திட்டம். அத்துடன், பொருளாதாரமும் மேம்படுத்தப்படவேண்டும். நிதிப்பாய்ச்சல் எம்மை சூழவே இருக்கவேண்டும்.

ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன்.

கண்டியில் போட்டியிடும் எமது இளம் வேட்பாளர் பாரத் அருள்சாமி என்ன செய்யப்போகின்றேன் என கூறி வாக்கு கேட்கின்றார். ஆனால், இவர் பிரதிநிதித்துவத்தை அழிக்க வந்துள்ளார் எனக்கூறியே மற்றவர்கள் வாக்கு கேக்கின்றனர்.

அதேபோல் பதுளையில் செந்தில் தொண்டமான் 10 வருடங்களாக மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார். அவர் திடீரென வானத்தில் இருந்து குதித்தவர் அல்லர். எனினும், இவர் எதனையும் செய்யவில்லை என விமர்சித்தனர். திட்டங்களை முன்வைத்தால் விலக தயார் எனவும் சவால் விட்டனர். செந்தில் தொண்டமான் ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை.

அதேவேளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையேற்கும் போது அவருக்கு 26 வயது. இப்போது எனக்கும் அதே வயது தான். உங்களின் முன்னோர்கள் அவரை நம்பினர். நீங்கள் என்னை நம்புவீர்களா? எனக்கும் ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள்." - என்றார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: மக்களின் பிரச்சினைகள் இருந்தால் கூறலாம் - ஆலோசனைகள் இருந்தால் முன்வைக்கலாம் - ஜீவன் தொண்டமான்
மக்களின் பிரச்சினைகள் இருந்தால் கூறலாம் - ஆலோசனைகள் இருந்தால் முன்வைக்கலாம் - ஜீவன் தொண்டமான்
https://1.bp.blogspot.com/-gI4ueJnKfRw/XwbbyluBwUI/AAAAAAABjCI/rYAJuAA7LT0KSgClWmEuMpEv773BdN-wgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-gI4ueJnKfRw/XwbbyluBwUI/AAAAAAABjCI/rYAJuAA7LT0KSgClWmEuMpEv773BdN-wgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/07/jeevan_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/07/jeevan_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy