40 வருடங்கள் அமைச்சரவையில் இருந்த மலையக அரசியல்வாதிகள் செய்திராத பல மடங்கு சேவைகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி வெறும் நான்கரை வருடங்களில் செய்திருப்பதாக அக்கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(30) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“மலையகம் தொடர்பில் புதியக் கனவுகளை நாம் காணவில்லை. நாம் கண்ட கனவுகள் கணிசமானவையை நிறைவேற்றி இருக்கிறோம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல், அமரர் ஆறுமுகன் தொண்டமான் வரையில் 40 வருடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் வெறும் கனவுகளை மாத்திரம் கண்டார்கள்.
நாங்கள் வெறும் நான்கரை வருடங்களே அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறோம். இந்த நான்கு வருடங்களில் 40 வருடங்களுக்கு பல மடங்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் தமிழ் கிராமங்களை அமைத்தல், பிரதேசசபைகள் அதிகரிப்பு உள்ளிட்டப் பல அபிவிருத்திகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி செய்திருக்கிறது.
சிறிகொத்தவை பிடிப்பதே எமது இலக்கு என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் எங்களது இலக்கு அலரி மாளிகையை பிடிப்பதே.” எனவும் தெரிவித்தார்.