haiiii

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் நவீன் திஸாநாயக்க கருத்து

- க.கிஷாந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க 2023 வரை நீடிப்பார். அதற்கு முன்னர் மாற்றம் வேண்டுமெனில் கட்சி சம்மேளனத்தைக்கூட்டி கட்சி யாப்பின் பிரகாரமே மாற்றங்கள் செய்யப்படவேண்டும் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தயாரென நவீன் திஸாநாயக்க விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் வஜீவ அபேவர்தன கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தார். வஜிரவின் இந்த அணுகுமுறை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

" வஜீர அபேவர்தன எனக்கு எதிராக கடுமையான முறையில் விமர்சனங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. தனது கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார். இவ்வாறு கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. இதுதான் ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள ஜனநாயகப் பண்பாகும்.

அந்தஅடிப்படையிலேயே தலைமைத்துவம் தொடர்பில் நான் கருத்து வெளியிட்டிருந்தேன். அதே உரிமை வஜீர போன்றவர்களுக்கும் இருக்கின்றது.

அத்துடன், பெரும்பான்மையானோரின் விருப்பத்துடன் ஜனநாயகமுறைப்படியே தலைமைத்துவ தேர்வு இடம்பெறவேண்டும் என்ற விடயத்தையும் நான் குறிப்பிட்டிருந்தேன். எனவே, ரணில் விக்கிரமசிங்க விலகும்போது, இரகசிய வாக்கெடுப்புமூலம் தலைவரை தெரிவுசெய்வதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும். இதன்போது வஜீரவாலும் போட்டியிடமுடியும்.

நுவரெலியா மாவட்டத்தில் நாம் சிறந்த மட்டத்தில் இருக்கின்றோம். இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவது உறுதி. அந்த எண்ணிக்கையை மூன்றாக அதிகரித்துக்கொள்வதற்கே பாடுபடுகின்றோம். நாடு தழுவிய ரீதியிலும் முன்னர் இருந்ததைவிடவும் பலமாக இருக்கின்றோம்.

2023 ஆம் ஆண்டுவரை தலைமைப்பதவியில் இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2019 இல்கூடிய எமது கட்சி சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.  அதில் மாற்றம் செய்யவேண்டுமெனில் சம்மேளனத்தை மீண்டும் கூட்டவேண்டும். சஜித்தையும் பொறுமைகாக்குமாறு கோரினோம். ஆனால், அவர் சூழ்ச்சியில் சிக்கிவிட்டார். " - என்றார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6652,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14077,கட்டுரைகள்,1515,கவிதைகள்,70,சினிமா,330,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் நவீன் திஸாநாயக்க கருத்து
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் நவீன் திஸாநாயக்க கருத்து
https://1.bp.blogspot.com/-105ev8XffMY/Xx674IFKMyI/AAAAAAABkpo/OpgRL9ticsUkThAvzQpw7WpQvHwsNsUTgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-105ev8XffMY/Xx674IFKMyI/AAAAAAABkpo/OpgRL9ticsUkThAvzQpw7WpQvHwsNsUTgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/07/naveen_27.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/07/naveen_27.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy