haiiii

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து - ரிஷாட் (Audio)

- ஊடகப்பிரிவு

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், காக்கையன்குளத்தில் இன்று (08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், இலக்கம் 1 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“கத்தோலிக்க சகோதரரான செல்லத்தம்பு அண்ணன் மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளராகவும், இந்து சகோதரர் நந்தன் முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளராகவும், சிங்கள சகோதரர் ஜயதிலக்க வட மாகாண சபை உறுப்பினராகவும், இந்தப் பிரதேசத்தின் உள்ளூராட்சி சபை உறுப்பினராக குணம் ஐயா போன்ற இன்னும் பலர், உள்ளூராட்சி சபைகளில் பிரதித் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் எமது கட்சியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டனர். இதன் மூலம், வடக்கிலே பிரிந்துகிடந்த தமிழ், முஸ்லிம், சிங்கள உறவை “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” கட்டியெழுப்பியிருகின்றது என்ற உண்மை புலப்படுகின்றது. எமது கட்சி அனைத்து இனங்களையும் அரவணைக்கின்றது என்பதையும் இது கட்டியங்கூறி நிற்கின்றது.

அரசியலில் எதையெதை எல்லாமோ செய்ய சக்தி இருந்ததோ, அத்தனையையும் இந்தப் பிரதேசத்துக்குச் செய்துள்ளோம். மீண்டும் இந்தப் பிரதேசத்துக்கு நீங்கள் வந்து சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்ததோடு, வாழ்க்கைக்குத் தேவையான கட்டமைப்புக்களை அமைத்துக் கொடுத்தோம். அதேபோன்று, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், நாம் எடுத்த முயற்சியின் பலனாக, இன்று இந்தப் பிரதேசத்தின் பாதை புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெறத் தொடங்கியமை, எமது பணிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். தமிழ் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்ததோடு, அவர்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முடிந்தளவில், மிக நேர்மையாக செய்திருக்கின்றோம்.

எம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சூழ்ச்சி, இப்போது உக்கிரமாக இடம்பெறுகின்றது. சமுதாயத்துக்காக பேசுகின்ற தலைமைகளை வீழ்த்த நினைக்கும் சக்திகளே, எமக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டியுள்ளன.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதில் இன்பம் கண்டு, அதன்மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை சுவீகரிக்கும் கூட்டத்துக்குப் பின்னால் அலைந்துதிரிபவர்கள் பற்றி நாம் என்னதான் கூறுவது? அவர்களின் மனம் எப்படி இதற்கெல்லாம் இடங்கொடுக்கின்றது?

இந்தச் சமுதாயத்தை துன்பப்படுத்துவதையும், துவம்சம் செய்வதையும் குறிக்கோளாகக்கொண்டு, திட்டமிட்டு இயங்கும் இந்தச் சக்திகள், எம்மை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. ஊர்களும் ஊரவர்களும் ஒன்றுபடுவதன் மூலமே இவற்றை முறியடிக்கலாம்” என்று கூறினார்.

ஆடியோவை கேட்பதற்கு இங்கே அழுத்துங்கள்
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14497,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து - ரிஷாட் (Audio)
இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து - ரிஷாட் (Audio)
https://1.bp.blogspot.com/-LodDsnjwIW4/XwWO26VNJwI/AAAAAAABi8k/bN62u00xLNk3dRopbB3KbYANDj4K7TC0QCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-LodDsnjwIW4/XwWO26VNJwI/AAAAAAABi8k/bN62u00xLNk3dRopbB3KbYANDj4K7TC0QCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/07/rb_8.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/07/rb_8.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy