- ரஸீன் ரஸ்மின்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு (தராசு) கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 33 வருடங்களின் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிடைத்த முதல் ஆசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தராசு கூட்டணி சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீமுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஏ.பாயிஸூக்கு இடையில் விருப்பு வாக்குகளில் கடும் போட்டி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அலிசப்ரி ரஹீம் விருப்பு வாக்கு பட்டியலில் முன்னணி வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இNவேளை, தராசு கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர் மற்றும் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோருக்கு இடையில் மூன்றாம், நான்காம் இஅடத்திற்கான போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.