haiiii

43 இலட்சம் ரூபா பெருமதியுடைய மஞ்சள் - 6 பேர் கைது - கற்பிட்டியின் சம்பவம்

- அசார் தீன்


43 இலட்சம் ரூபா பெருமதியுடைய மன்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்

இந்தியாவிலிருந்து அனுமதிபத்திரமின்றி படகு மூலம் கொண்டுவரப்பட்ட சுமார் 1396 கிலோ மஞ்சள் கற்பிட்டி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கற்பிட்டி விஜயா கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி துரையடி பகுதியில் டிங்கி படகு ஒன்றை சோதனை செய்தவேளை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மஞ்சளைக் கொண்டுவந்து லொறி ஒன்றிலும் வெகனார் சொகுசு கார் ஒன்றிலும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இதன்போது  2 பேர் கடற்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலம் அடிப்படையில் நுரைச்சோலை கடற்படையினருக்கு தகவல் வழங்கியமையையடுத்து மஞ்சள் பொதிகளை கற்பிட்டியிலிருந்து கேகாலை கொண்டு சென்ற லொறி மற்றும் வெகனார் சொகுசு காரையும்  நுரைச்சோலையில் வைத்து மரைத்து சோதனை செய்துள்ளனர். இதன்போது ஒருதொகை மஞ்சள் பொதிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது இவர்களிடமிருந்து விசாரணைகளை மேற்கொண்டவேளை  வெள்ள தீவு மற்றும் இப்பந்தீவு பகுதிகளில் ஒருதொகை மஞ்சள் பொதிகளை மரைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதநையடுத்து கற்பிட்டி விஜயா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினால் மரைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை மஞ்சள் பொதிகள் கைப்பற்றுள்ளதாக கற்பிட்டி விஜயா கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது 1396 கிலோ கிராம் மஞ்சள், டிங்கி படகு ஒன்றும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வெகனார் சொகுசு கார் ஒன்றும், லொறி ஒன்றும் 3 தொலைபேசிகள் 4 சிம் அட்டைகள் 26550 ரூபா பணமும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெருமதி சுமார் 43 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவர்கள் நால்வர் கற்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கேகாலயைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேர் மற்றும் 1396 கிலோ கிராம் மஞ்சள், டிங்கி படகு ஒன்றும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வெகனார் சொகுசு கார் ஒன்றும், லொறி ஒன்றும் 3 தொலைபேசிகள் 4 சிம் அட்டைகள் 26550 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6655,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14084,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3775,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2781,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: 43 இலட்சம் ரூபா பெருமதியுடைய மஞ்சள் - 6 பேர் கைது - கற்பிட்டியின் சம்பவம்
43 இலட்சம் ரூபா பெருமதியுடைய மஞ்சள் - 6 பேர் கைது - கற்பிட்டியின் சம்பவம்
https://1.bp.blogspot.com/-VhRcWsEmrpQ/X0tUQiVz2dI/AAAAAAABme4/sWKKQueHaKcuZCOyUYbQAmYYH92nvVIYgCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-VhRcWsEmrpQ/X0tUQiVz2dI/AAAAAAABme4/sWKKQueHaKcuZCOyUYbQAmYYH92nvVIYgCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/08/arrested_13.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/08/arrested_13.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy