haiiii

ரிஷாட் MP பொலிஸ்மா அதிபரிடம் அவசர வேண்டுகோள் - காரணம் உள்ளே

- ஊடகப்பிரிவு 

அநியாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரின் விடயத்தில் தலையீடு செய்து, அவருக்கு நீதி பெற்றுக் கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பேருவளை, தர்கா நகரில், கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹஷீப் மரிக்காரின் விடுதலை குறித்தே, அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினரான ஹஷீப் மரிக்கார், பேருவளை, அதிகாரிகொட பள்ளிக்கு எதிரே இடம்பெற்ற வடிகான் துப்புரவு பணிகளின் போது, ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்தே, மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அவர் அங்கு சென்றுள்ளார். பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்தப் துப்புரவாக்கும் பணிகளின் போது, முச்சக்கரவண்டி சாரதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சினையை அடுத்து, குறித்த இடத்துக்கு வந்த விஷேட அதிரடிப் படையினர், இந்த விவகாரங்களில் தலையிட்டது மாத்திரமின்றி, பொலிஸாரின் உதவியுடன் பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரை கைது செய்தனர். பின்னர், களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், பதில் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டார்.

பொலிஸாரின் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை அடுத்து, இரண்டு நாட்கள் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் முடிவடைந்த பின்னர், மீண்டும் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, பிணை வழங்க பொலிஸார் மறுத்துள்ளனர். ஆகவே, இந்த விடயம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம் என நான் அச்சப்படுகின்றேன்.

எனவே, இந்த விடயத்தில் நீங்கள் தலையிடுவதுடன், முறையான விசாரணைகள் ஊடாக நீதி வழங்குமாறு, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14499,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: ரிஷாட் MP பொலிஸ்மா அதிபரிடம் அவசர வேண்டுகோள் - காரணம் உள்ளே
ரிஷாட் MP பொலிஸ்மா அதிபரிடம் அவசர வேண்டுகோள் - காரணம் உள்ளே
https://1.bp.blogspot.com/-CS9gphAuQVc/Xz9vbTJ7AvI/AAAAAAABmOU/-gm893rHU9QwNEGKiADlgDkBOpCYGZ-UwCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-CS9gphAuQVc/Xz9vbTJ7AvI/AAAAAAABmOU/-gm893rHU9QwNEGKiADlgDkBOpCYGZ-UwCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/08/rb_21.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/08/rb_21.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy