இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மேலும் சில வேட்பாளர்கள் வாக்களிக்கும் விதம் எமது கெமராவில் பதிவாகியிருந்தது.
அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் துணைவியார் மிரிஹான பெங்கிரிவத்த விவேகாராம விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தமது வாக்கை பதிவு செய்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை பதிவு செய்தார்.
அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை வீரவில சூரனிமல கனிஷ்ட வித்தியாலத்தில் பதிவு செய்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மாளிகாவத்த அபேசிங்ஹாராம விகாரையில் தமது வாக்கை பதிவு செய்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை, புதிய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கை பதிவு செய்தார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில் வாக்கெடுப்பு நிலையம் பாதுகாப்பனது என காண்பிப்பதற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பம்பலபிடிய லின்ட்சே மகளிர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை பதிவு செய்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் குடும்பம் சகிதம், தனது வாக்கினை பதிவு செய்தார்.