- க.கிஷாந்தன்
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்து கடைகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் இன்று மதியம் சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே 150 வெளிநாட்டு சிகரெட் பக்கட்கள் மீட்கப்பட்டுள்ளது.
டயகம, அக்கரப்பத்தனை, லிந்துலை போன்ற நகரங்களை இலக்கு வைத்து இவ்வாறான சிகரெட் வகைகளை விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களான இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் செலுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களையும், முச்சக்கரவண்டியையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 150 சிகரெட் பக்கட்கள் அடங்கிய 3000 ஆயிரம் சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.