அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “19 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒவ்வொரு சரத்திற்கும் திருத்தங்களை முன்வைத்தார்.
அதேபோன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அவரைப்போன்றே திருத்தங்களை முன்வைத்தனர்.
ஆனால் இன்று, 20 ஆம் திருத்த சட்டத்திற்கு சென்று சகல அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த 20 ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக உயர்நீதிமன்றத்திற்கான நியமனம், பொலிஸ், முப்படைகளுக்கான உயர் பதவி நியமனம், கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கான நியமினம் ஆகியவற்றை ஜனாதிபதியின் தனி தீர்மானங்களுக்கு அமைய மேற்கொள்ள முடியும்.
ஆகவே 20 ஆம் திருத்த சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதனால், இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்றத்துக்குச் செல்ல தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துக்கொண்டு செல்வதே 20வது திருத்தத்தின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார அமரசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு எதிரானவன் இல்லை. ஆனால் ஏனைய நாடுகளின் பிரஜாவுரிமையை பெற்றவர்கள் இலங்கையின் சார்பில் சிறந்தமுடிவுகளை எடுப்பார்கள் என மக்கள் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.