முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரிப்கான் பதியுதீன் உட்பட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை முறையான விதத்தில் மேற்கொண்டு மேலும் சந்தேகநபர்கள் இருப்பின் அவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணங்களை தயாரித்து தலை மன்னார் பகுதியில் 80 ஏக்கர் நிலப்பரப்புடைய இரண்டு காணிகளை விற்பனை செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைபாடு தொடர்பில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்களில் உள்ளடங்கியுள்ள கையொப்பத்தை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு கிடைக்கப்பெற்ற பின்னர் விசாரணைகளை நிறைவு செய்து விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.