இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் தீப்பற்றிய MT - New Diamond என்ற எண்ணெய் கப்பலில் இருந்து கப்பலின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவது இன்று (05) அதிகாலை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கப்பலை ஆழ்கடல் நோக்கி 42 கடல் மைல் தொலைவுக்கு இழுத்து சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறைக்கு அப்பால் உள்ள 38 கடல் மைல் தொலைவில் எரிபொருளுடன் இந்தியா நோக்கி சென்ற கப்பல் நேற்று (03) முன்தினம் தீ பற்றிக்கொண்டது.
அந்த கப்பலில் பிரதான இயந்திர பிரிவில் உள்ள சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பினால் இந்த தீ பரவல் ஏற்பட்டது.
சம்பவத்தை கேள்வியுற்ற உடனே இலங்கை கடற்படையினரும், விமானப்படையினரும் உடனடியாக தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், தீயை அணைக்கும் பணிகளில் இந்திய கடற்படையும், இந்திய கடற்பாதுகாப்பு படையின் கப்பலும் ஈடுப்படுத்தப்பட்டன.
இதன் பின்னர் தொடர்ச்சியாக 35 மணித்தியாலங்கள் வரை மேற்கொண்ட பகிரத பிரயத்தனத்தை அடுத்து நேற்று மாலை 7 மணியளவில் கப்பலில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து டிங்கி படகை பயன்படுத்தி கப்பலை ஆழ்கடல் திசைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கரைக்கு 40 கடல் மைல் தொலைவுக்கு குறித்த கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஒருவேளை, கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் அந்த பகுதிக்கு வருகைத் தந்துள்ளனர்.
அவர்கள் நேற்றிரவு 11.20 மற்றும் 11.25 க்கு விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.