- சந்திரன் குமணன்
அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் அந்த பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் இவ்வாறு மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிபுணர் குழு குறித்த கப்பல் தொடர்பில் ஆராயும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) மாலை வாடிவீட்டு கடற்கரையோரமாக சென்று கடற்படையின் வேகப்படகின் ஊடாக ஆழ்கடலில் தரித்துள்ள கடற்படையின் யுத்தக்கப்பல் ஒன்றின் ஊடாக தீப்பற்றிய பாரிய கப்பலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் மீட்பு பணிகளின் விசேட நிபுணர்களும் இடர்களை மதிப்பிடுபவர்களும் சட்ட ஆலோசகர்களும் அடங்குகின்றனர்.