- நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச் எம் எம் ஹரிஸ் அவர்களை வரவேற்று பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (01) கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டவரும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல் அப்துல் மஜிட், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம் நிசார், ஏ.எம் பைறோஸ், எம்.எஸ்.எம் ஹரீஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் பஸ்மீர், எம்.என்.எம் றணீஸ், உட்பட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சாய்ந்தமருதை சேர்ந்த முக்கியஸ்தர் ஏ.எம். ஜெமீல் உட்பட அவரின் ஆதரவு முக்கியஸ்தர்கள் யாரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. தன்னை தோற்கடிக்க ஏ.எம். ஜெமீல் தலைமைத்துவ கட்டுப்பாட்டையும் மீறி செயலாற்றினார் என்ற குற்றசாட்டை ஊடக மாநாடொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்திருந்ததும். சிராஸும்- ஜெமீலும் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் உரசிக்கொள்ளும் தன்மைகொண்டவர்கள் என்பதால் இவ்விழா நிகழ்வில் அவர் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது.
சாய்ந்தமருதில் சிராஸ், ஹரீஸுக்கு நடத்திய அமோக வரவேற்பு விழா - மண்ணின் முக்கியஸ்தர் ஜெமீல் விழாவில் இல்லை