நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு இரண்டாம் நிலை மண்சரிவு ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலகத்திற்கும் இரண்டாம் நிலை மண்சரிவு ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அவதானத்துடன் கூடிய ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவினால் குறித்த பகுதிகளில் வெள்ளம், மண்திட்டு சரிந்து விழுதல், கல் சரிந்து விழுதல், நிலம் தாழிறங்கல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படகூடும் என்பதால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மக்களை கேட்டுள்ளது.