பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு அடைக்கலம் வழங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதில் 2 பெண்களும் உள்ளடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் இவர்கள் பயன்படுத்திய காரொன்றும் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியூதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் பலர் எதிர்வரும் நாள்களில் கைதுசெய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
COMMENTS