இனவாதிகளை திருப்தி படுத்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் குடும்ப உறுப்பினர்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்ய வேண்டாம் என R.M சப்ராஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இலங்கை சற்று வித்தியாசமான நாடாக இருப்பதாகவும் அவர் தெவித்துள்ளார் ஏன் என்றால் குற்றம் செய்யாமல் தண்டனை வழங்கப்படும் நாடு என்றால் அது இலங்கையாகதான் இருக்கும் என தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமது சொந்த மண்ணில் வந்து வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த அமைப்பு புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களின் தலைவர்கள் ஊடாக கடிதங்களை பெற்று குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கி, மன்னாரிற்கு செல்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னரே முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் பணத்தை விடுவித்து தந்ததன் பின்னர் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களை மன்னாரிற்கு அழைத்து வந்த நிலையில மக்கள் வாக்களிப்பை மேற்கொண்டனர்.
இதேவேளை தேர்தல் முடிவடைந்து 6 தினங்களில் குறித்த அமைப்பு பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பழிவாங்கும் நோக்கில் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளுக்குள் பலவந்தமாக உயர் அதிகாரிகள் அடிக்கடி வருவதாகவும் அவர்களின் வருகையால் அசௌகரியமாக இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மேலும் சில இனவாத ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் நற்பேறுக்கு களங்கம் விளைக்கும் வேலையை செய்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
COMMENTS