ஹபராதுவ, போகஹகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொரபே பகுதியில் இருந்து போகஹகொட நோக்கிய பயணித்த லொறி, மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 31 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொடலதெனிய, பின்னதுவ பகுதியை சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் காயமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
COMMENTS