- எம்.எப்.எம்.பஸீர்
கொழும்பு - வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், தெமட்டகொடை பகுதிக்கு இரகசியமாக சென்று பெற்றுக் கொண்டதாக கூறப்படும் போலி மரண விசாரணை சான்றிதழ் ஒன்றின் உதவியுடன் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள அடக்கஸ்தலம் ஒன்றில் அடக்கம் செய்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெல்லம்பிட்டி பொலிஸார் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தற்போது அந்த விசாரணைகளில் ஓர் அங்கமாக, உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவுகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபப்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
COMMENTS