haiiii

A/L வெட்டுப்புள்ளியில் பாரிய அநீதி - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

- எம்.ஜே.எம் பாரிஸ்

2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியிருக்கிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவே ஜீவரத்ன தேரரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

A/L பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுமே உயர்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர்.

எனினும் அரச பல்கலைக்கழகங்களின் வரையறுக்கப்பட்டுள்ள தன்மை காரணமாக நீண்டகாலமாகவே குறிப்பிட்டளவான மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகின்றனர்.

2019ம் ஆண்டில் 181,000 மாணவர்கள் A/L பரீட்சைக்குத் தோற்றியிருந்த போதிலும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டனர். எஞ்சிய 141,000 மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை 10 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கூறியிருப்பினும், அது நம்பக்கூடியதாக இல்லை.

ஏனெனில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தால், அதற்காக ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட வளங்களின் அளவிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால் 2020ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டதை விடவும் 4000 கோடி ரூபா குறைவாகவே 2021ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எனவே 2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் Z Scoreயின் அடிப்படையில் பாதிப்பை எதிர் கொண்டுள்ள மாணவர்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுபற்றி கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15644,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2821,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: A/L வெட்டுப்புள்ளியில் பாரிய அநீதி - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
A/L வெட்டுப்புள்ளியில் பாரிய அநீதி - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
https://1.bp.blogspot.com/-3fruj1ubCiI/X6fk1Cja12I/AAAAAAABp2g/52P3bngko-UuzUeyItvJJo1tG9y3BcJGACLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-3fruj1ubCiI/X6fk1Cja12I/AAAAAAABp2g/52P3bngko-UuzUeyItvJJo1tG9y3BcJGACLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/11/al.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/11/al.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy