மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பமாகியுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வியான சட்டத்தரணி அனூஸா சந்திரசேகரனினால் புதிய கட்சி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்சியின் பெறர் சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கீழ் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி என்கிற தொழிற்சங்கப் பிரிவும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மிகவிரைவில் இந்த கட்சி மற்றும் தொழிங்சங்கம் சார்ந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை சட்டத்தரணி அனூஸா சந்திரசேகரன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
COMMENTS