haiiii

அமொரிக்காவின் அரசியல் மாற்றம் ஆசியா மக்களை பாதுகாக்குமா ?

- கிண்ணியா ஐனி

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளார். இவர் பராக் ஒபாமா காலத்தில் எட்டு ஆண்டுகள் துணை அதிபராக இருந்தவர். இந்த தேர்தலில் இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தெரிவு செய்யப்பட்டது நாம் யாவரும் அறிந்த உண்மை. இதில் 56 வயதான கமலா ஹாரிஸ் ஒரு தமிழ் பெண். அதேபோல், ஜோ பைடன் நெதர்லாந்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர். இங்கு இருவரும் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

இப்போது இவர்களின் வெற்றியும் நிர்வாக மாற்றங்களும் எப்படிப்பட்ட மாறுதல்களை உலக நாடுகளில் ஏற்படுத்தும் குறிப்பாக இலங்கை இந்தியா சீனா ஜப்பான் தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கப் போகும் மாற்றங்களும் தாக்கங்களும் வித்தியாசமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதிலும் சீனாவை நம்பி இருக்கும் நாடுகளின் நிலையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சீனா;
 இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் லடாக் பகுதி எல்லையில் அத்து மீறல்களை செய்து அந்த இடங்களில் தனது இராணுவ முகங்களை அமைத்து வருவது மட்டுமின்றி புதிய புதிய பாதைகளை அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எல்லை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி நாலு பக்கமும் இந்தியாவை முடக்க திட்டம் தீட்டும் ஒரு கம்யூனிஸ்ட் நாடுதான் சீனா. 

ஹாங்காங் தாய்லாந்து நாடுகளை தனது ஆதிக்கத்தில் வைத்து இந்த நாடுகளை தனது நாட்டின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்கிறது. இந்த நாடுகளை பயம் காட்டும் வகையில் அடிக்கடி ஆயுத சோதனைகளையும் செய்கிறது சீனா. மறுபுறம் உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்த நாடுகளில் கடன் சுமையை கொடுத்து சொத்துக்களை வாங்கி பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. பொதுவாக இவர்களின் நோக்கம் வியாபாரம் மற்றும் உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ஆள வேண்டும் என்ற எண்ணம்தான். இத்தனைக்கும் தனது இராணுவ பலத்தையும் பொருளாதாரத்தையும் நம்பி இருக்கும் சீனாவின்  இராணுவம் போர் பயிற்சி இருந்தாலும் போரில் போராடிய அனுபவம் இல்லாத இராணுவ கட்டமைப்பை கொண்ட நாடு சீனா என்றால் அது மிகையாகாது.

மேலும், சீனா கம்யூனிஸம் கொள்கை கொண்ட நாடு என்பதால் அங்கு முஸ்லிம் மக்கள் தங்கள் மார்க்க வழிபாடுகளில் ஈடு பட தடை விதிக்கிறது. சில பள்ளி வாசல்களை பொது கழிவறையாக மாற்றி இஸ்லாமிய மக்களை அவமானம் செய்கிறது. இலட்சக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை முகாமில் அடைத்து கட்டாய மதமாற்றம் செய்கிறது என்று பல தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. அங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை. மீடியா சுதந்திரம் இல்லை. தணிக்கை செய்யப்பட்ட ஏனைய நாடுகளின் திரைப்படங்கள் புத்தகங்கள் என எல்லா வகையிலும் சொந்த நாட்டு மக்களை ஒரு அடிமையாக நடத்துகிறது சீனா. என்ற பலவித  குற்றச்சாட்டு உலகம் முழுவதும் இருக்கிறது.

இந்தியா; 
இலங்கை தவிர ஏனைய மூன்று பகுதியிலும் எல்லையை பாதுகாக்க தினம் தினம் போராடும் நாடு. பிராந்திய ஆதிக்க கொள்கைகள் இல்லாமல் பொருளாதாரத்தில் தன்னை உயர்த்தி வல்லரசாக ஆக வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து செயல் படும் ஒரு தீபகற்ப நாடாகும். தாய்லாந்து ஹாங்காங்  சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது விடு படவேண்டும் என்று போராடும் அரசும் மக்களும்.

இலங்கை;
தற்போது சீனாவின் பக்கம் சாயல் கொண்ட ஒரு அரசாங்கம். தன்னை பொருளாதார ரீதியில் வளப்படுத்த சீனாவை முதன்மையாக நம்பி இருக்கும் நாடு. இங்கு இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு எதிரான கொள்கைகள் இல்லை எல்லா நாடுகளையும் அனுசரிப்பு செய்து போகும் சிறந்த ஜனநாயக நாடு இலங்கை.

இருந்தும் இங்கு மதவாதம் தீவிரமாக அரசியலில் நுழைந்து மத சுதந்திரத்தை இல்லாமல் செய்து தினமும் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி விட்டார்கள் இனவாதத்தை மூலதனமாக கொண்டு அரசியல் செய்யும் சில அரசியல் வாதிகள். இந்த பேரினவாதம் தொல்பொருள் ஆராய்ச்சி நிலம் என்று முஸ்லிம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பு செய்கிறது.  உலக சுகாதார அமைப்பு கொரோனா தாக்கி மரணித்த உடல்களை முஸ்லிம்கள் அவர்கள் மார்க்க கொள்கைக்கு ஏற்ப மண்ணில் புதைக்கலாம் என்று சொல்லியும் இனவாத  சிந்தனையுள்ள சிலர் அதற்கு தடை போடுகிறார்கள்.

மேலும், இலங்கையில் தமிழ் மொழி அரச கரும மொழியாக உள்ள பிரச்சினை, அத்துமீறிய குடியேற்றங்கள்,  முஸ்லிம் மக்களின் ஹலால் சான்றிதழ், ஹபாயா மதராஸாக்கள், பள்ளிவாசல்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுகளும் இல்லாமல் இருக்கும்  போதும், இலங்கை இந்தியா ஒப்பந்தம் மூலம் ராஜீவ்காந்தி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல் முறையை மாற்றி அதை இல்லாமல் செய்ய பேரினவாதம் சதி செய்வதாக இந்தியா மற்றும் தமிழ் தரப்புகள் சந்தேகப் படும் படி இருக்கிறது இன்றைய  சூழல். 

அமெரிக்கா;
இரண்டாம் உலகப் போர் காலம் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய போது உலகளாவிய ரீதியில் ஹீரோவாக மாறியது அமெரிக்கா. அதேநேரத்தில், ரஷ்யா பல துண்டுகளாக பிரிந்து போனதும் இன்னும் பல வல்லமை பெற்று இன்று பிராந்திய பாதுகாப்பு, உலக நாடுகளை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தான் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்ற கொள்கை கொண்ட நாடு. இதற்கு தடையாக யார் வந்தாலும் அமெரிக்கா விட்டு விடாது. அது தனி மனிதன் என்றாலும் சரியே ஒரு நாடு என்றாலும் சரியே! ஒரு இயக்கம் என்றாலும் சரியே!

மேற்கூறிய இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்காவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர் வரும் ஜனவரி 20 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது நிர்வாகப் பணியை ஏற்றுக்கொள்ள இருக்கிறது. 

தற்போது அமெரிக்காவில் வர இருக்கும் அரச நிர்வாகத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதாவது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்களின் அலுவலக தலைமை அதிகாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரோகிணி லஷ்மி ரவிந்திரன்.  இது இப்படியிருக்க,  வருகிற புதிய நிறுவனத்திற்கு உதவும் வகையில் சில முக்கிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறது அந்த அணிகளின் வரிசையில் முக்கிய அணித்தலைவராக இந்தியாவை பூர்விகம் கொண்ட அமெரிக்கர்களை நியமித்துள்ளது. அவர்கள் கொரோனா ஆலோசனை கட்டுப்பாடு குழுவின் இணைத் தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் டாக்டர் செலின் ராணி கவுண்டர். மேலும் அணுஆயுதங்களை வடிவமைத்தல் உற்பத்தியாளர்கள் மற்றும் சோதனை செய்யும் எரிசக்தி குழுவை கையாளும் குழுவின் தலைவராக பேராசிரியர் ராமமூர்த்தி மற்றும் ரமேஷ் என சில முக்கியமான துறைகளுக்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த தலைவர்கள் உட்பட மேலும் 21 இந்தியா பூர்வீகம் கொண்டவர்களை வெள்ளை மாளிகை அரசு நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டுள்ளது.  அதாவது சுமோனா குஹா, புனித் தல்வார், தில் பிரீத் சித்து, பவ்னீத் சிங், அருண் வெங்கட்ராமன், பிரவினா ராகவன், ஆத்மான் திரிவேதி, ஆஷா எம், ஜார்ஜ், சுபாஸ்ரீ ராமநாதன், பவ்யா லால், ஷீதல் ஷா, அஸ்வின் வாசன், மீனா சேஷாமணி, ராஜ் தே, சீமா தந்தா, ராஜ் நாயக், ரீனா அகர்வால், திவ்யா குமாரையா, குமார் சந்திரன், மற்றும் அனீஷ் சோப்ரா போன்றவர்கள் புதிய நிர்வாகத்தில் இணைக்கப்பட உள்ளனர்.

ஆகவே, மேல் கூறிய தரவுகளின் அடிப்படையில் இலங்கை இந்தியா சீனா போன்ற நாடுகளின் அமெரிக்காவின் இந்த அரச நிர்வாக மாற்றங்கள் அதிகம் தாக்கம் செலுத்தும் என்பதை கருதியே சீனா இந்தியா எல்லைகளில் ஆடிய ஆட்டத்தை அடக்கி வாசிக்கிறது. இந்த மாற்றங்கள் எப்படியான தாக்கத்தை பேரினவாத சிந்தனை கொண்டவர்களிடம் செலுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

அதேநேரம், அமெரிக்காவின் அரசியல் நிர்வாகத்தில் தமிழர்களின் ஆதிக்கம் இலங்கை  தமிழ் மக்களின் அபிலாஷைகள் முஸ்லிம்களின் மத சம்பிரதாய சுதந்திரம் என்பவைகள் அடுத்து வரும் நாட்களில் எப்படியான மாற்றங்களை நிகழ்த்தப் போகிறது என்பதையும் நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த இடத்தில் கடைசியாக ஒன்றை இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, தமிழ் மக்கள்களின் நலன்களை பாதுகாக்க உலக நாடுகளில் இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அந்த அந்த நாடுகளின் அரசியல் அதிகாரத்தில் அதிகம் தாக்கம் செலுத்தும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டார்கள். இதுவரைக்கும் எந்த முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க எந்த வித குரலும் கொடுக்கவில்லை கொடுக்கவும் மாட்டார்கள். எமது மத சுதந்திரத்தை பாதுகாத்து உரிமையுடன் வாழ வேண்டுமானால் முஸ்லிம் அரசியல் வாதிகளை ஒதுக்கி சமூக சிந்தனை கொண்டவர்கள் மார்க்க அறிஞர்கள் ஊர் தலைவர் என பலரும் இணைந்து தமிழ் மக்களுடன் நல் இணக்கம் கருதி வாழ வேண்டும். அப்போதுதான் எமது இருப்பும் உரிமைகளும் பாதுகாக்க முடியும்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6720,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15057,கட்டுரைகள்,1537,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3837,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2805,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: அமொரிக்காவின் அரசியல் மாற்றம் ஆசியா மக்களை பாதுகாக்குமா ?
அமொரிக்காவின் அரசியல் மாற்றம் ஆசியா மக்களை பாதுகாக்குமா ?
https://1.bp.blogspot.com/-Fa4kDzcQQaY/X7aGcCROBMI/AAAAAAABqbc/JwGIO2DCi6kXYUKE0NL0d6BZpQ5nPqdmwCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-Fa4kDzcQQaY/X7aGcCROBMI/AAAAAAABqbc/JwGIO2DCi6kXYUKE0NL0d6BZpQ5nPqdmwCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/11/article_19.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/11/article_19.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy