இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பில் இவர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஒருவர் கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் உயிரிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
COMMENTS